உனக்கு இளைப்பாறுதல் தேவையா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு இளைப்பாறுதல் தேவையா?

சில சமயங்களில், தடகளப் போட்டிக்குச் செல்வதற்குத் தேவைப்படும் பலம் போன்ற ஒருவித வலிமை நமது வாழ்க்கைக்குத் தேவைப்படலாம். உண்மையில், வேதாகமம் நம்மை விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகிறது. (2 தீமோத்தேயு 2:5) ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான வாய்ப்புகள் மற்றும் சவால்களை நமக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. ஆண்டவரின் அழைப்புக்குப் பதிலளிப்பதும், அவர் நமக்காக வைத்திருக்கும் பாதையில் நடப்பதும் கூட சில நேரங்களில் நம்மைக் களைப்படையச் செய்வதாக இருக்கலாம். இந்தத் தருணங்களில், ஆண்டவர் தாமே நமக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறார் என்பதை நினைவில்கொள்வது மிகவும் நல்லது.

நீ கிறிஸ்துவில் இளைப்பாறாமல் வேலை செய்துகொண்டே இருந்தால், நிச்சயம் சோர்வடைவாய். ஒரு விளையாட்டு வீரரைப் போலவே, உழைப்புக்கும் கடினமுயற்சிக்கும் இடையில் ஓய்வெடுப்பதற்கான நேரம் உனக்குத் தேவையாய் இருக்கிறது.

தேவனுடைய பிள்ளையாக, நீ இளைப்பாறும் இடமானது “ஒரு மறைவான இடமாகும்”. அங்கே நீ இயேசுவுடன் நேரடியாகக் கலந்துரையாட முடியும்.

ஒவ்வொரு நாளும், நீ எப்படிப்பட்ட காலகட்டத்தை கடந்து சென்று கொண்டிருந்தாலும், அவர் உனக்கு முன்பாகச் செல்ல வேண்டியது அவசியமாய் இருக்கிறது. அவருடைய ஜீவனும் சமாதானமும் உனக்குள் இருப்பது அவசியம்! ஆண்டவர் உன்னுடன் இருந்து உனக்கு இளைப்பாறுதல் தருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதைத்தான், யாத்திராகமம் 33:14ல் தேவன் இவ்வாறு சொல்கிறார்: “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

நீ தனியாக இல்லை. எந்த நேரத்திலும், கர்த்தரின் சமூகத்திலிருந்து உன் பலத்தை மீண்டும் உன்னால் பெற்றுக்கொள்ள முடியும். அவருடைய துதிகளைப் பாடுவதன் மூலமும், அவர் உனக்கு எவ்வளவு உண்மையுள்ளவராகவும் நல்லவராகவும் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் அவருடைய வார்த்தையை வாசிப்பதன் மூலமும் நீ பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று ஆசீர்வதிக்கப்படுவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது எல்லா ஊக்கத்துக்காகவும், ஆண்டவருடைய வார்த்தையையும் சித்தத்தையும் எங்கள் அனைவருடனும், தனித்தனியாகப் பகிர்ந்துகொண்டதற்காகவும் மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் நான் உங்கள் மின்னஞ்சல்களுக்காகக் காத்திருக்கிறேன்; ஒவ்வொரு முறையும், அந்த நாளில் நான் கேட்க வேண்டிய செய்தி சரியாக என்னை வந்தடைகிறது. நீங்கள் சொல்வது சரிதான், ஏற்கனவே எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது. பல துறைகளில் போராடிக்கொண்டிருக்கும் என் சகோதரனிடம் கர்த்தரை மட்டும் நம்புமாறு சொல்லியிருந்தேன்; அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை திருச்சபையில் நான் கேட்ட செய்தியான, சமாதானத்தோடு இரு, அமைதியாய் அமர்ந்திருந்து என்று சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் எனக்கு நினைவிருக்கிறது. அதைத்தான் இன்று நான் செய்யத் திட்டமிட்டுள்ளேன், ஏனென்றால் போர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது; இப்போது நான் இளைப்பாறுகிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக மற்றும் உங்களது ஊழியத்திற்காகவும் வாழ்விற்காகவும் நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்!” (தாரா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!