உனக்காக ஒரு வெகுமதி காத்திருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்காக ஒரு வெகுமதி காத்திருக்கிறது!

எபிரேயர் 11:6ல், ஆண்டவர் தம்மைத் தேடுபவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் வெவ்வேறு பதிப்புகளில் உள்ள வேதாகமக் கூற்றுகள் இவ்விதமாக இருக்கிறது…

 • “…நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.” (திருவிவிலியம் பொதுமொழிபெயர்ப்பு)
 • “…விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (பரிசுத்த வேதாகமம் O.V (BSI))
 • “…விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.” (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு (TCV))

இந்த வசனத்தில், ஆண்டவர் நம்மிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறார்: அவர் இருக்கிறார் என்று நம்ப வேண்டும் மற்றும் அவரைத் தேட வேண்டும். நீ ஏற்கனவே அவர் இருக்கிறார் என்பதை நம்புகிறாய். அவரை எப்படித் தேடுவது என்று இங்கே கூறப்பட்டுள்ளது…

 • உன் இருதயத்தையும் எண்ணங்களையும் அவருக்கு நேராகத் திருப்பு. (வேதாகமம், எரேமியா 29:13 பார்க்கவும்)
 • ஒரு நண்பனைப் போல அவரிடம் பேசு. (வேதாகமம்,யாக்கோபு 2:23 பார்க்கவும்)
 • உன் தேவைகளை அவருக்குத் தெரியப்படுத்து. (வேதாகமம், பிலிப்பியர் 4:6 பார்க்கவும்)
 • அவரைத் துதித்து ஆராதனை செய். (வேதாகமம், சங்கீதம் 92:1 பார்க்கவும்)
 • அவருடைய புகழைப் பாடு. (வேதாகமம், சங்கீதம் 22:3 பார்க்கவும்)
 • அவருடைய வார்த்தையை வாசி. (வேதாகமம், சங்கீதம் 119:9 பார்க்கவும்)
 • திருச்சபைக்குச் செல். (வேதாகமம், சங்கீதம் 133ஐப் பார்க்கவும்)
 • இயேசுவின் நாமத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுங்கள். (வேதாகமம், மத்தேயு 18:20 பார்க்கவும்)
 • அவருடைய சிருஷ்டிப்பை சிந்தி. (வேதாகமம், ரோமர் 1:20 பார்க்கவும்)
 • அமைதியாக இருந்து, அவருக்குச் செவிகொடு. (வேதாகமம், ஏசாயா 50:4 பார்க்கவும்)

தேவனைத் தேடுவதற்கு நிச்சயமாகப் பல்வேறு வழிகள் உள்ளன! தன்னை விடாமுயற்சியுடன் தேடுபவர்களுக்கு நிச்சயம் வெகுமதி அளிப்பதாக அவர் வாக்குப்பண்ணுகிறார். நீ இன்னும் அதிகமாக அவரைத் தேடினால் என்ன நடக்கும்?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!