உனக்காக இயேசு என்ன செய்தார் என்று பார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்காக இயேசு என்ன செய்தார் என்று பார்!

பிரபல எழுத்தாளரான சி.எஸ்.லூயிஸ் ஒருமுறை இவ்வாறு எழுதினார், “உன் காலடியில் படுத்திருப்பது உன்னுடைய நாய். சற்று இதைக் கற்பனை செய்து பார். உன் நாயும் ஒவ்வொரு நாயும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். நம்மில் சிலருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உலகில் உள்ள அனைத்து நாய்களும் மனுஷனாக மாற உதவி கோரினால், நீ நாயாக மாறத் தயாரா? உனது மனித சுபாவத்தைத் தாழ்த்தி, உனது அன்புக்குரியவர்களையும், உனது வேலை, பொழுது போக்கு, கலை, இலக்கியம், இசை போன்றவற்றையும் விட்டுவிட்டு, நேசத்துக்குரியவரின் முகத்தைப் பார்த்து சிரிக்கவோ பேசவோ இயலாமல், அவர்களைப் பார்த்து வாலை மட்டுமே ஆட்டுவது போன்ற மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை நீ தேர்ந்தெடுப்பாயா? கிறிஸ்து மனுஷனாக வந்ததன் நிமித்தம் உலகில் மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்தவற்றை ஒரு பொருட்டாக எண்ணவில்லை; பிதாவுடனான அவரது இடைவிடாத, தடையற்ற தொடர்பை குறைவாகப் பெற்றிருந்தார்.”

ஆண்டவர் மனிதரானார். இதைத்தான் மனுவுருவாதல் என்பர். மனுவுருவாதல் என்பதற்கான கிரேக்க வார்த்தை “சர்கோதென்டா”, அதன் அர்த்தம், “மாம்சமாக உருவானது” என்பதாகும். இயேசு ஒரு நிலையில் பிறந்தபோது, உண்மையிலேயே, ஒரு குழந்தையின் சரீரமாக மனுவுருவானவர் சர்வவல்லமையுள்ள தேவன்தான்!

“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று யோவான் 1:14-ல் வேதாகமம் நமக்குச் சொல்கிறது.

உன் மீதுள்ள அன்பினால், தேவ குமாரன் பூமிக்கு வந்து மனுவுருவானார். என் நண்பனே/தோழியே, அவர் உனக்காகவே இதைச் செய்தார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனக்கு மெலனோமா(தோல் புற்றுநோய்) இருப்பது டிசம்பர் 2015ல் கண்டறியப்பட்டது. நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை, எனக்கு காப்பீடு இல்லை மற்றும் என் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஜெபங்களை ஏறெடுத்தேன் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட இயற்கை மருந்துப் பொருட்களை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தேன். இறுதியாக ஜனவரி 2017ல் காப்பீடு கிடைத்துவிட்டது. 3 மருத்துவர்களையும் 2 மருத்துவமனைகளையும் அணுகினேன். ‘காத்திரு, உனக்கான சிறந்த திட்டம் என்னிடம் உள்ளது’ என்று ஆண்டவர் எனக்குச் சொன்னார். அவரது தெய்வீக இடைபடுதலால் 2 மருத்துவர்களையும் ஒரு சிறந்த மருத்துவமனையையும் கண்டுபிடிக்க முடிந்தது. 28 மார்ச், 2017 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனக்கு வலியே இல்லை. இதனால் 2 மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை செய்வது ஆண்டவருடைய கைகளாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபம் செய்தேன். இன்று நான் பரிசோதனை செய்ய வந்தேன், மருத்துவர் அதே வார்த்தைகளைக் கூறினார். அறுவை சிகிச்சை செய்தது நான் அல்ல; மரியா, நம் கர்த்தர்தான் அறுவை சிகிச்சை செய்தார் என்று கூறினார், எனக்குப் புற்றுநோய் இல்லை என்று குறிப்பிடப்பட்டு, என் சோதனை முடிவு வந்திருந்தது. ஓ சகோதரர் எரிக், ஒரு பெரிய பாவியான நான் இத்தகைய கிருபைக்கு எப்படித் தகுதியானவளானேன். நம் ஆண்டவர் எவ்வளவு மகத்தானவர்!!!” (மரியா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!