உண்மையிலேயே நீ யார்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உண்மையிலேயே நீ யார்?

ஒரு கால கட்டத்தில், உன் வாழ்வின் நோக்கத்தை அறியாமல் அநேக வேலைகளில் ஈடுபட்டு நிறைய காரியங்களை செய்துகொண்டிருப்பது போல நீ உணர்ந்ததுண்டா? இப்படிப்பட்ட காலங்களில் நீ யார் என்பதையும், நீ என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிறிதளவு கூட அறியாமல் திகைத்து நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கலாம்.

உன் அடையாளத்தையும், பங்கையும், நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் அல்லது நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதைப் பொறுத்து நிதானிக்க முடியும். உதாரணத்திற்கு, நீ வேலை புரியும் இடத்தில் நீ ஒரு ஆசிரியராக, மருத்துவராக, செவிலியராக, ஓட்டுநராக, பொறியாளராக இருக்கலாம். உன் வீட்டில் நீ ஒரு கணவனாகவோ, மனைவியாகவோ, பெற்றோராகவோ, அல்லது தேர்ச்சி பெற்று பட்டம் வாங்க நினைத்து படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவோ/மாணவியாகவோ கூட இருக்கலாம்.

நீ என்ன செய்கிறாய் என்பதை விட, நீ உண்மையில் யாராக இருக்கிறாய் என்பது தான் முக்கியம். வேதம் சொல்வது போல, “நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.” (பரிசுத்த வேதாகமம், உன்னதப்பாட்டு 7:10)

தேவனுடைய இந்த வார்த்தைகளை உன் செயல்களிலும், நீ எடுக்கப்போகின்ற முடிவுகளிலும், உன் நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டிய ஒரு சத்தியமாக எடுத்துக்கொள். அப்பொழுது நீ இந்த உலகத்தாரின் எண்ணங்களின்படியோ, அல்லது உன் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறோ நடந்துகொள்ளாமல், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவாறும் உன்னைக் குறித்து சொல்லப்பட்ட அவரது வார்த்தைக்கு ஏற்றவாறும் நீ நடந்துகொள்வாய்.

நீ விசேஷமானவன் / விசேஷமானவள், மற்றும் விலையேறப்பெற்ற ஒரு நபராய் நீ இருக்கிறாய். நீ இயேசுவுக்குச் சொந்தமானவன் / சொந்தமானவள். இயேசு தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தையும், ஜீவனையும் விலையாகக் கொடுத்து உன்னை வாங்கியிருக்கிறார். நீ அவரின் நேசத்துக்குரிய நபர். நீ யார் என்கின்ற அடையாளம் இயேசுவுக்குள் மட்டுமே இருக்கிறது. வேறு யாரிடமும் அதைத் தேடாதே.

என்னோடு சேர்ந்து ஜெபிக்கும்படியாக உன்னை அழைக்கிறேன்: “இயேசுவே, என் அடையாளம் நான் செய்யும் வேலைகளைப் பொறுத்து இல்லாமல் நான் யார் என்பதை பொறுத்தே உள்ளது. தேவனே நான் உம்முடைய உடைமை. உமது பிரியம் என் மேல் இருக்கிறது. இந்த சத்தியத்தை எனக்கு வெளிப்படுத்தி என்னை விடுவித்து எனக்குப் புத்துணர்வு அளித்ததற்காக உமக்கு நன்றி. இந்த சத்தியத்திற்குள்ளாக வாழ எனக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்… ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சல் பதிவை நான் வாசிக்கத் துவங்குவதற்கு முன்னால், நான் மிகவும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தேன். என் கணவனால் கைவிடப்பட்டு, என் இரண்டு குழந்தைகளையும் நான் தனியாக வளர்த்து வருகிறேன். என்னால் இரண்டு குழந்தைகளுடைய பொறுப்பையும், அவர்களுக்கு உண்டான தேவைகளையும் சந்திக்க முடியாமல் சோர்ந்துபோனவளாய் இருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த அற்புதமான ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சல் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அன்றிலிருந்து நான் தினமும் இதை வாசித்து வருகிறேன். இந்தப் பதிவுகள் என் மன அழுத்தத்தை நீக்கி, சமாதானத்தையும் சந்தோஷத்தையும், என் வாழ்வைக் குறித்த ஒரு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. உங்களுடைய இந்தப் பதிவுகளுக்காகவும், இதன் மூலமாக தினமும் எனக்கு ஊழியம் செய்வதற்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.” (எலிசபெத், ஆலந்தூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!