உங்கள் மாம்சத்தில் நீங்கள் ஒரு முள்ளைப் பெற்றிருக்கிறீர்களா…?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்கள் மாம்சத்தில் நீங்கள் ஒரு முள்ளைப் பெற்றிருக்கிறீர்களா…?

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய இந்த வார்த்தைகளை என்னுடன் சேர்ந்து தியானிக்க நான் உங்களை அழைக்கிறேன்:

“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (வேதாகமத்தைப் பார்க்கவும், 2 கொரிந்தியர் 12: 7-10)

பவுல் இங்கே நம்முடன் ஒரு பிரச்சனையைப் பகிர்ந்து கொள்கிறார், அதென்னவென்றால், அவருக்கு தன் மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக, இறையியலாளர்கள் இந்த முள் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் தர்க்கம் செய்தனர்:

  • பவுலின் எழுத்துக்கள் நமக்குத் தெரிவிப்பதுபோல, அவரது உடல்நலம் குன்றி அவரது கண்களில் பிரச்சனை இருந்ததா…?
  • அவர் சோதனையை அனுபவித்துக்கொண்டிருந்தாரா…?
  • சில வகையான எதிர்ப்புகளால் அவர் நசுக்கப்பட்டிருந்தாரா…?
  • தனிமை அவருக்கு பாரமான சுமையாக இருந்ததா…?
  • திருச்சபைகளில் கஷ்டங்கள் இருந்ததா?
  • இந்த சோதனையின் மூலக்காரணமாக இருந்தது பிசாசானவனா?
  • அல்லது இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சம்பவித்ததா?

உண்மையில், இவையெல்லாம் முக்கியம் அல்ல … பவுல் எப்படி உணர்ந்தார் என்பதை நீ நிச்சயமாய்ப் புரிந்துகொள்வாய். ஒரு முள் என்பது மிகச் சிறியதாகத் தோன்றுகிற ஒன்று, ஆனால் உண்மையில், அது நம் எண்ணங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும்.

நம்முடைய முட்களானது … நம்மைத் தொடர்ந்துகொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள், அல்லது நம் கழுத்தை நெரிக்கும் வியாதி, வாழ்க்கைத் துணையான கணவருடன் அல்லது மனைவியுடன் அதிகரித்து வரும் சண்டைகள், மன்னிக்கவோ அல்லது மன்னிப்புக் கேட்கவோ தன்னை விட்டுக்கொடுக்க முடியாத நிலை, இப்போது இருக்கிற தனிமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என்பது போன்ற ஒரு தோற்றம்… நம் கால்களுக்குக் கீழே ஒரு முள் இருப்பதைப் போல, அது நன்கு மறைந்திருந்தாலும், இன்னும் நம் அனைவரையும் ஒரே மாதிரியாகக் காயப்படுத்துகிறது … சில நேரங்களில் மிகவும் மோசமாக நம்மைக் காயப்படுத்திவிடுகிறது.

ஏதோ ஒரு வகையில், பவுல் துன்பத்தை அனுபவித்திருக்க வேண்டும்… ஆண்டவர் தன்னை இந்த முள்ளிலிருந்து விடுவிக்குமாறு அவர் மூன்று முறை மன்றாடினார்.

உன் மாம்சத்தில் காணப்படுகிற ஒரு முள்ளின் காரணமாக நீ அவதிப்படுகிறாயா? இது மிகச்சிறியதாகவும், வேறு எவராலும் பார்க்க முடியாததாகவும் இருந்தாலும், இந்த முள்ளால் நீ அனுபவிக்கும் துன்பத்தை இயேசு புரிந்துகொள்கிறார், அது எதுவாக இருந்தாலும் அவர் புரிந்துகொள்கிறார்.

ஆம், முட்களால் முடிசூட்டப்பட்டவர்…புரிந்துகொள்கிறார். மேலும், அவர் பவுலிடம் பேசியதைப்போல, உன்னுடன் பேசுகிறார்: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!