உங்கள் உறவுகளில் நீங்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்கள் உறவுகளில் நீங்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள்?

ஆண்டவருக்கு உறவுமுறைகள் ஏன் மிகவும் முக்கியமானது என்று எப்போதாவது நீங்கள் உங்களையே கேட்டுக்கொண்டதுண்டா?

நான் நேற்று எழுதியதுபோல, நம் ஆண்டவர் உறவுமுறைகளின் ஆண்டவர். அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். பின்பு, மனிதன் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக, ஆண்டவர் ஏவாளைப் படைத்தார். (வேதாகமத்தை பாருங்கள், ஆதியாகமம் 2:18) பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் திட்டம். அதனால்தான் ஒவ்வொரு உறவிலும் இடைவிடாத முயற்சியும் கவனமும் தேவை. அது ஒரு செடியை போன்றது, நன்றாக மலர்ந்து வளர்வதற்கு, தண்ணீர் ஊற்றி முறையான இடைவெளியில் பராமரிக்க வேண்டும். இது திருமண வாழ்க்கைக்கும், நம்முடைய சுற்றத்தார், பிள்ளைகள், சக ஊழியர்கள் போன்ற எல்லா உறவுமுறைகளுக்கும் பொருந்தும். ஆண்டவருடனான நம்முடைய உறவிற்கும் இது பொருந்தும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் மேலான உறவில் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். ஆதலால், நன்மையான, ஆரோக்கியமான உறவுகளை பராமரித்து வளர்ப்பதற்கு இன்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? புன்னகை செய்யுங்கள், யாருக்காவது ஒரு கடிதக்குறிப்பு எழுதுங்கள், தொலைபேசியில் தொடர்பு செய்யுங்கள், ஒரு அன்பான குறும் செய்தியை அனுப்புங்கள், ஒரு உதவி கரம் நீட்டுங்கள், திடமளிக்கும் வார்த்தையை பேசுங்கள், “அனுதினமும் ஒரு அதிசயம்” செய்தியை யாருக்காவது அனுப்புங்கள், etc. நீங்கள் விரும்புவதை பொறுத்தது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!