உங்கள் இருதயத்தில் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்கள் இருதயத்தில் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

இன்று, நாம் எரேமியா 29:11ஐ பற்றிய தியானத்தைத் தொடர்வோம். குறிப்பாக சமாதானத்தைக் குறித்துப் பார்க்கலாம்.

ஆண்டவருடைய வார்த்தை சொல்கிறது: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பார்க்கவும், எரேமியா 29:11)

மற்றொரு மொழிபெயர்ப்பில், “நான் உனக்கென்று வைத்திருக்கிற என் திட்டங்களை அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அது உன்னை செழிப்பாக்குவதற்கே, உனக்குத் தீமை செய்வதற்கு அல்ல; உனக்கு நம்பிக்கையும் எதிர்காலத்தையும் கொடுப்பதற்கான நினைவுகளே” என்று கூறுகின்றது.

மொழிபெயர்க்கப்பட்ட இந்த அழகான வார்த்தைகளாகிய “செழிப்பு” மற்றும் “சமாதானம்”, மூல பாஷையாகிய எபிரேய மொழியில் “ஷாலோம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது சமாதானம், நல்லிணக்கம், நல்வாழ்வு, அமைதி, செழிப்பு மற்றும் முழுமை என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

இன்று நான் உங்களுடன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

ஒரு சமயம் ராஜா ஒருவர் அமைதிக்கான சிறந்த படத்தை வரையும் கலைஞருக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்தப் பரிசைப் பெறுவதற்கு பல கலைஞர்களும் முயற்சித்தனர். ராஜா அனைத்து படங்களையும் பார்த்தார். அவைகளில் இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவை இரண்டிலும் இருந்து ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

ஒரு படம் மிக அமைதியான ஏரியின் படம். ஏரி ஒரு தெளிவான கண்ணாடியைப் போல இருந்தது. ஏனென்றால், அமைதியான உயரமான மலைகள் அதைச் சுற்றி மேலே பஞ்சு போன்ற மேகங்களுடன் நீல வானமும் அதில் பிரதிபலித்தது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் இது அமைதிக்கான சரியான படம் என்று நினைத்தனர்.

அடுத்த படத்தில் மலைகள் இருந்தன. ஆனால், இந்த மலைகள் ஒழுங்கற்று வெறுமையாக இருந்தன. படத்தைப் பார்ப்பவர்களின் அமைதியைக் கெடுப்பதைப்போல, மேலே வானம் காணப்பட்டு, அதிலிருந்து மழை பெய்து கொண்டும் மின்னல் அடித்துக் கொண்டும் இருந்தது. மலையின் ஓரத்தில் ஒரு நீர்வீழ்ச்சி வெண்படலம் போல விழுந்துகொண்டிருந்தது. இது பார்ப்பவர்களுக்கு ஒரு அமைதியான தோற்றமாக காட்சி அளிக்கவில்லை. ஆனால், ராஜா இதைப் பார்த்தபோது அருவியின் பின்னால் உள்ள மலைப்பகுதியின் மறைவில் சிறிய விரிசல் இருப்பதைக் கண்டார். அதில் ஒரு தாய்ப் பறவை தன் கூட்டைக் கட்டி, அங்கே சீரிப்பாயும் நீரின் வேகத்திற்கு நடுவில் தன் கூட்டை சரியான முறையில் அமைத்து, மிகவும் அமைதியுடன் அமர்ந்திருந்தது.

எந்தப்படம் பரிசை வென்றது என்று நினைக்கிறீர்கள்? ராஜா இரண்டாவது படத்தைத்தான் தேர்வு செய்தார்.

ராஜா அதற்கான விளக்கத்தை இவ்வாறு கூறினார், “அமைதி என்பது சத்தம், பிரச்சனை அல்லது கடினமான உழைப்பு இல்லாத இடத்தில் இருப்பது என்று அர்த்தம் அல்ல; அமைதி என்பது இப்படிப்பட்ட எல்லா விஷயங்களுக்கு மத்தியில் இருந்து கொண்டும், உங்கள் இருதயத்தில் அமைதியாக இருப்பதாகும். இதுவே அமைதியின் உண்மையான அர்த்தம்” என்று அவர் மிகவும் ஆழமாகத் தொடப்பட்டு, விளக்கம் அளித்தார்.

ஆண்டவர் உங்களிலும் அதையே விரும்புகிறார். ஆண்டவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவதை விட (அவர் சூழ்நிலையை மாற்றினாலும்), உங்கள் இருதயத்தை மாற்றுவதில் அதிக அக்கறை காட்டுகிறார்.

அவரை முற்றிலும் நீங்கள் சார்ந்திருக்கும்போது உங்கள் சமாதானம் முழுமையடைகிறது… குழப்பத்தின் மத்தியிலும் அவர் அதை உங்களுக்கு சுதந்திரமாகத் தருகிறார்.

இன்று, இயேசு உங்களிடம் கூறுவது இதுதான்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.” (பார்க்கவும், யோவான் 14:27)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!