உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் இருக்கின்றவாறே ஆண்டவர் என்னை நேசிக்கிறார் என்பதை கற்றுக்கொண்டு, என்னை நானே ஏற்றுக்கொள்ளவும் நான் கற்றுக்கொள்வது மிக அவசியமும் முக்கியமானதும் ஆகும். இன்னும் துணிகரமாக சொன்னால், ஒருவர் தம்மை தாமே நேசிப்பது மிகவும் முக்கியம்! அதாவது, “நான் மற்ற எல்லாரையும் விட சிறந்தவர்” என்று சொல்வது அல்ல. அப்படி கூறுவது தற்பெருமை. மாறாக, “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்…” என்று கூறுவது. (வேதாகமம், சங்கீதம் 139:14). இதுதான் நன்றியுணர்வு, அதுமட்டுமின்றி இன்னும் மேலானது… ஏனென்றால் இது பைபிளில் உள்ளது!

உங்கள் மீது பேசப்பட்ட புண்படுத்தும் வார்த்தைகளால் அல்லது முற்காலத்தில் ஏற்பட்ட வேதனைகளால் இந்த வார்த்தைகளை அறிவிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்… ஆனால், இதை தெரிந்துகொள்ளுங்கள்: உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை ஆண்டவர் குணமாக்க விரும்புகிறார். அவருடைய அன்பு சகல காயங்களையும் குணமாக்கும்: கடந்த கால காயம், உள்மன காயம், உடலில் ஏற்பட்ட காயம், இதில் எதுவானாலும் குணமாகும்.

இதனால்தான் இன்று நான் அறிக்கையிடுகிறேன்… உங்களைப் பற்றிய உங்கள் பார்வை மாறப்போகிறது! ஆண்டவர் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதோடு அது உடன்படும். பெலத்தோடு இதை அறிக்கையிடுங்கள்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”

அன்பரே, உங்களைப் பாராட்டுகிறேன், உங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!