உங்களுக்கு…. நான் யார்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, ஆண்டவர் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசட்டும்.
உங்களுக்கு…. நான் யார்?
உங்கள் ஜெபங்களுக்கு பதிலளித்து, உங்கள் வாழ்க்கையில் அசாத்தியமான காரியங்களை நிறைவேற்றி, உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவரா?
நான்தான் உங்கள் தேவைகளுக்கு பதிலளிப்பவரா? உங்கள் கண்ணீரை துடைப்பவரா?
நான் உங்களுக்கு இவை அனைத்துமாகவும்… இதற்கு மேலாகவும் இருக்க விரும்புகிறேன்.
என் உயிரின் ஆழத்திற்குள் உங்களை வரவேற்கிறேன். என் இருப்பின் மையத்திற்குள். என் பிரசன்னத்தை நீங்கள் ஒவ்வொரு கணமும் தழுவிக்கொள்ளவும், தொடர்ந்து உங்களை வழிநடத்தி ஆச்சரியப்படுத்தவும் என்னை அனுமதிக்க உங்களை அழைக்கிறேன்.
என்னுடைய அன்பு ஒரு ஒளி, புத்துணர்ச்சியூட்டும் காற்று. அதுவே ஆட்கொள்ளும் அக்கினியும் ஆகும். என் அன்புதான் கொடுத்தது, என் அன்புதான் வழங்கியது, என் அன்புதான் பதிலளித்தது, என் அன்புதான் தியாகம் செய்தது.
நான் உன்னை நேசிக்கிறேன், என் ஒவ்வொரு மூச்சிலும், நீ என்னோடு நெருங்கி இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நொடியும், நீ எனதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் … இன்பமானாலும் துன்பமானாலும், வருத்தத்திலும் அக்களிப்பிலும். நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்.
நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் உன்னை கைவிடமாட்டேன். நான் உன்னை புறக்கணிக்கமாட்டேன். ஏனென்றால் நான் உன்னில் வாழ்கிறேன், நீ என்னுடையவன் / என்னுடையவள். நீ ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் என் அன்பு உனக்கு முன்னே செல்கிறது. நான் இங்கு உனக்காக இருக்கிறேன்.”
வேதாகம குறிப்புகள் : உன்னதப்பாட்டு 8:6, உபாகமம் 4:31, சங்கீதம் 37:28