இவ்வுலகில் எண்ணூறு கோடி மக்கள் இருக்கிறார்கள்… அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இவ்வுலகில் எண்ணூறு கோடி மக்கள் இருக்கிறார்கள்… அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்!

நமது பூமியில் எண்ணூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்! இத்தனை பேர் இருந்தாலும், இரண்டு பேர் ஒரே மாதிரியானவர்களாக இருப்பதில்லை!

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். கண்டிப்பாக, நாம் “உருவ ஒற்றுமையை” பார்க்கலாம், சரீரப்பிரகாரமாக நம்மைப் போலவே தோற்றத்தைக் கொண்டவர்களை நாம் பார்க்க முடியும். ஆனால் நம்மைப் போலவே இருக்கிற இன்னொரு “நம்மை” (நபரை) சந்திக்க வாய்ப்பே இல்லை!

ஒவ்வொரு நபரும் ஆண்டவருக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை இந்த உண்மை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு நபரும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பினார், ஏனென்றால் அவர் நம் ஒவ்வொருவரையும் கருத்தாகவும், அன்போடும் சிருஷ்டித்திருக்கிறார்.

உன்னிடத்திலும் என்னிடத்திலும் நம் ஒவ்வொருவருக்கான விசேஷித்த தன்மைகள் உள்ளன. ஆனாலும், ஆண்டவருடைய பார்வையில் நாம் ஒரே மாதிரியாக பார்க்கப்படுகிறோம்… அவர் நம் ஒவ்வொருவரையும் மிகுந்த அன்போடும் விசேஷித்த விதத்திலும் நேசிக்கிறார்.

டாம்சன் என்பவர் என்னிடம் இதைத்தான் பகிர்ந்துகொண்டார்… “அன்புள்ள எரிக், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற ஊக்கமளிக்கும் மின்னஞ்சலுக்காக நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். இது உண்மையிலேயே என் வாழ்க்கையை மாற்றுகிறதாய் இருக்கிறது, நான் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குள் வளர்ந்து வருகிறேன். நான் விசேஷமானவன், தனித்துவமானவன், மகிமையின் ராஜாவாகிய இயேசு என்னோடு கூட எப்போதும் இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”

டாம்சனைப் போலவே, நீயும் விசேஷமானவன்/விசேஷமானவள் மற்றும் தனித்துவமானவள்/தனித்துவமானவள், உன் ஆண்டவர் எப்போதும் உன்னோடு கூட இருக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!