இயேசு தம்மைத் தாழ்த்தினார்… பிதாவாகிய தேவன் அவரை உயர்த்தினார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு தம்மைத் தாழ்த்தினார்… பிதாவாகிய தேவன் அவரை உயர்த்தினார்!

இன்று, ஆண்டவர் உனக்காகவும் எனக்காகவும் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி நான் அவருக்கு சகல மகிமையையும் கொடுக்க விரும்புகிறேன்! மேலும், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களில் நான் பெற்ற சில சாட்சிகளை நாளை பகிர்ந்துகொள்கிறேன். ஆண்டவர் செய்த செயல்கள் மிகவும் ஆச்சரியமானவைகள்! ஆனால் இன்று, பிலிப்பியர் 2:5-11-ல் நாம் காணும் இந்த அற்புதமான பத்தியை வாசித்து, அதைத் தியானிக்க நான் உன்னை அழைக்கிறேன், அது உன் ஆத்துமாவை திருப்திப்படுத்தட்டும்.

இது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தாழ்மையான குணத்திற்கும், நம்மை இரட்சிக்கும்படி பரலோகத்தின் மகிமைகளை விட்டுக்கொடுத்ததன் மூலம் அவர் நமக்குக் காட்டிய அன்புக்கும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இயேசுவே, உமக்கு நன்றி!

“கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:5-11)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “விடாமுயற்சியுடனும் தாழ்மையுடனும் வாழ்வது, எல்லா விதத்திலும் அவர் மூலம் சாத்தியம் என்பதை ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார். நான் என் கவலைகளை அவர் மீது வைத்துவிடவும், என்னை அவர் வழிநடத்தவும் ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொண்டேன்.” (டெய்ஸி, சிவகாசி)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!