இயேசு சமாதானப் பிரபு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு சமாதானப் பிரபு!

வேதாகமத்தில், இயேசு “சமாதானப்பிரபு” என்றும் அழைக்கப்படுகிறார் (ஏசாயா 9:6)

சொல் அகராதியின்படி, “இளவரசன்” அல்லது “பிரபு” என்ற வார்த்தையானது “தலைப்பிலேயே ராஜரீகத்தைக் கொண்டிருக்கும் ஒருவரின் கண்ணியத்தைக் குறிக்கும் பெயராகும்; ஒரு சமஸ்தானம் அல்லது மாகாணத்தின் ஆட்சியாளர்” என்பது இதன் அர்த்தமாகும். இயேசுவுக்கு ராஜரீகம் உண்டு, மேலும் அவருக்கு பிரபு என்ற பட்டத்தை வழங்குவதன் மூலம், பிதாவாகிய தேவன் அவருக்கு இந்தப் பட்டத்துடன் சேர்ந்து வரும் அனைத்து கண்ணியத்தையும் வழங்குகிறார்.

ஆனால் “பிரபு” என்ற வார்த்தை ராஜாவின் குமாரனையும் குறிப்பதாய் இருக்கிறது. இவ்வாறு, அவர் பூமியில் ஆட்சி புரிந்து ராஜரீகம் செய்யும் ராஜா என்பதை தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசுவே சமாதானப் பிரபு, உன் வாழ்வில் மெய்யான சமாதானத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரே ஒருவர் இயேசு மட்டுமே ஆவார்.

அவரிடம் தான் உண்மையான சமாதானத்தை நீ பெற முடியும்.

  • முதலாவதாக, தேவனுடன் சமாதானம் பண்ணு. இயேசுவே சமாதானப் பிரபு, ஏனென்றால் அவரது தியாகமும் பலியும் ஆண்டவருடன் உன்னை ஒப்புரவாக்குகிறது.
  • அதோடு கூட, உன் இருதயத்தில் நிலவும் சமாதானம், வேறு எங்கும் கிடைக்காத ஒரு சமாதானமாகும்.

இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!