இயேசு எனக்காகப் பரிந்துபேசுகிறாரா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு எனக்காகப் பரிந்துபேசுகிறாரா?

எல்லா நேரத்திலும் என்னை ஆறுதல்படுத்தும் ஒரு எண்ணம் இருக்கிறது, அந்த எண்ணம் இன்று உன்னை ஆழமாக உற்சாகப்படுத்தட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு எனக்காகப் பரிந்துபேசுகிறார் என்பதுதான் அந்த எண்ணம். ரோமர் 8:34-ல் வேதாகமம் அதை உறுதிப்படுத்துகிறது… “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”

நமக்கு உதவி தேவைப்படும்போது, நம்முடைய அருமை இரட்சகராகிய இயேசு, பிதாவுக்கு முன்பாக நின்று நமது பட்சமாக மன்றாடுகிறார்! அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறார். நம்முடைய நலனுக்காக ஜெபிக்கும்படி, தம்முடைய முழு இருதயத்தோடும் அவர் வேண்டுதல் செய்கிறார்‌ என்பதைத் தெரிந்துகொள்வது எனக்கு ஆறுதலாய் இருக்கிறது.

நான் ஒருபோதும் தனிமையாக இல்லை என்று முழுநிச்சயமாக நம்பலாம் என்ற எண்ணம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது… ஏனென்றால், என்னை ஒருபோதும் தம்முடைய பார்வையிலிருந்து விலக்கிவிடாமல், எனக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் கண்ணுக்குப் புலப்படாத மண்டலங்களிலிருந்து எனக்கு உதவி செய்யவும், நான் உற்சாகப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக என்னைப் பாதுகாக்கவும், ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளவும் ஒருவர் என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் உனக்காகவும் இதைச் செய்கிறார்… இயேசு உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார், அவர் உனக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். தேவனுடைய குமாரன் இன்று மீண்டும் உன்னை நேசித்து, உனக்காக கருத்தாய் ஜெபிக்கிறார்.

உனக்கு தயவு கிடைக்கும்படிக்கு, அவருடைய உதவியை நீ உறுதிப்படுத்திக்கொள்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இயேசுவே உமக்கு நன்றி. நான் இந்த மின்னஞ்சல்களை எப்படிப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் தொடர்ந்து உற்சாகமாய் இருக்கிறேன். எனது மின்னஞ்சல் வரிசையில் இருக்கும் ஊக்கமளிக்கும் மின்னஞ்சல்கள் எல்லாவற்றிலும், இந்த ஒரு மின்னஞ்சலை மட்டும் நான் நிச்சயம் வாசித்துவிடுவேன். மணல் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! உங்களது இணைப்புகள், வீடியோக்கள் மற்றும் தொடர் வேதாகம பயிற்சி வகுப்புகள் போன்றவையும் கூட எனக்கு மிகவும் பிடிக்கும். இயேசு கிறிஸ்துவுடனான எனது உறவு தினமும் ஆழமாக வளர்கிறது. இது உண்மையிலேயே அனுதினமும் ஒரு அதிசயம்தான். அன்பு எரிக், நீங்கள் உண்மையாகவே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட உண்மையான தேவ ஊழியராய் இருக்கிறீர்கள்” (ஹேமா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!