இயேசு உன் இருதயத்தின் மீது தமது சுவாசக் காற்றை ஊதுகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு உன் இருதயத்தின் மீது தமது சுவாசக் காற்றை ஊதுகிறார்!

“ஒரு சில நிமிடங்கள் உன் வேலைகளை சற்று நிறுத்திவிட்டு, இந்த நாள் முழுவதும் நீ கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் / சொந்தமானவள் என்பதை உணர்வாயாக.”

இயேசுவே சத்தியமானவர்… அவரே சத்தியம். அவர் ஒரு கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ தனக்குள் வைத்திருப்பதோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதோ இல்லை. அவரே முற்றிலும் சத்தியமாக இருக்கிறார். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது! (யோவான் 14:6)

ஒரு நபர் தன்னுடைய வயது, இனம், அல்லது சமூக வர்க்கம் போன்ற எதையும் பொருட்படுத்தாமல், இயேசு கிறிஸ்துவே சத்தியமானவர் என்றும், பிதாவிடம் செல்ல ஒரே வழி அவர் தான் என்றும் உணர்ந்தால், அது ஒரு உண்மையான அதிசயம் என்று நான் நம்புகிறேன். ஒரு மறுபிறப்பு, ஒரு மாற்றம், ஒரு புது வாழ்வு திடீரென்று நிகழ்கிறது! இயேசு கிறிஸ்து ஒருவரே ஒரு நபரின் இருதயத்தின் மீது சுவாசக் காற்றை ஊதி ஒரு உயிரை உயிர்த்தெழச் செய்பவராய் இருக்கிறார்.

இன்று, ஆண்டவர் நம் வாழ்வில் இதுவரை செய்தவைகளுக்காகவும், தொடர்ந்து செய்யப்போகும் நன்மைகளுக்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

  • அவருடைய இருதயம் உன்னைத் தேர்ந்தெடுத்தது. (யோவான் 15:16)
  • உன் ஜீவன் அவருடைய கரங்களில் உள்ளது, அவரே உனது அடைக்கலம் (சங்கீதம் 31:15)
  • நீ அவருடைய கிருபையின் ஜீவனுள்ள சாட்சியாகவும், நிருபமாகவும் இருக்கிறாய். (2 கொரிந்தியர் 3:3)

இந்த நாள் முழுவதும், ஒரு சில நிமிடங்கள் உன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நீ அவருக்குச் சொந்தமானவன்/சொந்தமானவள் என்பதை உணர்வாயாக. நீ அவருக்குச் சொந்தமான நபர் என்பதை எதுவும் மாற்ற முடியாது. இயேசுவின் தழும்புகள் உன் சுதந்திரத்தையும் புதிய வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் முத்திரையாக இருக்கிறது என்ற உண்மையை எதுவும் அழிக்க முடியாது. இது அசாதாரணமானது, அப்படித்தானே?

ஆண்டவர் உன்னைச் சூழ்ந்துகொள்வாராக, வாழ்க்கையை மாற்றும் அவரது அன்பை இன்று அவர் உனக்கு வெளிப்படுத்தட்டும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!