இயேசு உனக்குள் இருக்கிறார், உனக்காகவே இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு உனக்குள் இருக்கிறார், உனக்காகவே இருக்கிறார்!

ஒருவேளை, உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய தெய்வீகத் திட்டம் ஏன் மற்றும் எப்படி என்பதை நீ எப்போதும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆண்டவர் உண்மையிலேயே உன் வாழ்க்கையில் ஆர்வமுள்ளவராய் இருக்கிறாரா என்று நீ சந்தேகிக்கலாம்…

இந்த எண்ணம் உன்னைக் கவலைகொள்ளச் செய்ய வேண்டாம். அதை வளர விடாதே – அது ஒரு பொய்யாகும். மற்றவர்களை விட, ஆண்டவர் உன்னை அக்கறையுடன் பார்த்துக்கொள்ள விரும்புகிறார். உன் தந்தையை விடவும், உன் தாயை விடவும் அவர் உன்னை மிக அதிகமாக நேசிக்கிறார், அவர் உன்னை நேசிக்கிறார், அவர் உன்னை நேசிக்கிறார்!

நான் இன்று அறிக்கையிடுகிறேன்… நீ வலிமையானவன், உறுதியானவன், மற்றும் நீ விடாமுயற்சியுள்ளவனாய் இருக்கிறாய்…

  • ஏனென்றால், ஆண்டவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார், அவர் உன் பலத்தை புதுப்பிக்கிறார்.
  • ஏனென்றால் உன் விசுவாசமும் நம்பிக்கையும் அவர்மீது இருக்கிறது!

என் தோழமையே, நீ இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல… நீ கிறிஸ்துவுடன் பரலோகத்தில் உள்ள இடங்களில் அமர்ந்திருக்கிறாய் (வேதாகமத்தில் எபேசியர் 2:4-6 ஐப் பார்க்கவும்.

நீ தோல்வியடையும் நிலையில் இல்லை. உனக்குள் இருக்கும் கிறிஸ்துவினால், நீ ஜெயங்கொள்ளும் இடத்திலிருந்து போராடுகிறாய்.

என்னுடன் சேர்ந்து இதை அறிக்கையிடு: அவருடைய ஜீவன் என்னில் இருக்கிறது; அவன் அன்பு எனக்கானது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!