இயேசு இங்கேதான் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு இங்கேதான் இருக்கிறார்!

பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் தேவனிடமிருந்து ஒரு முக்கியமான வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தனர்… ஒரு நாள், மேசியா வந்து தமது மக்களை முற்றிலும் விடுவிப்பார் என்பதுதான் அந்த வாக்குத்தத்தம்! (வேதாகமத்தில் மீகா 5:2ஐப் பார்க்கவும்)

“மேசியா எப்போது வருவார்? எங்கள் மேசியா, எங்கள் மீட்பர் அவர் வந்துவிட்டாரா?” என்று சொல்லி இந்த விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால்… நமக்கு எவ்வளவு பெரிய மாற்றம் இது! ஆம், ஒரு இரட்சகருக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை… அவர் ஏற்கனவே வந்துவிட்டார்! அவர் வந்தது மட்டுமல்ல, அவர் இன்னும் இங்கேதான் இருக்கிறார், நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முந்தைய கால விசுவாசிகள் யாருக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்திருந்தார்களோ, அவர் ஒவ்வொரு நாளும் நம்முடன் இருக்கிறார். எத்தனை அருமையான பரிசு இது! எவ்வளவு பெரிய நற்செய்தி இது!

உன்னை விடுவிக்க வருவார் என்று நீண்டகாலமாக நீ எதிர்பார்த்துக்கொண்டிருந்த உன் இரட்சகராகிய மேசியா இதோ இங்கே இருக்கிறார். நீ வானத்தைப் பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை. இயேசு இங்கேதான் இருக்கிறார், உனக்கு அருகாமையில், உனக்குள் வாழ்கிறார். உனக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் அவர் உன்னை இரட்சிக்கிறார்.

இன்று நீ அவரை மீண்டும் நம்பலாம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!