இயேசுவோடு நேரத்தை செலவிடுவது உன்னை மாற்றும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவோடு நேரத்தை செலவிடுவது உன்னை மாற்றும்!

“ஆண்டவருடைய பிரசன்னத்தில் நீ நேரத்தைச் செலவிடும்போது, பரிசுத்த ஆவியானவர் உன்னை இயேசுவின் சாயலாக மாற்ற நீ இடங்கொடுக்கிறாய்!”

நம்மில் பெரும்பாலானோர், நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு கேக் செய்திருக்கலாம் அல்லது ஒரு கேக் செய்ய யாருக்காவது உதவியிருக்கலாம், அல்லது கேக் செய்வதை வீடியோக்களில் பார்த்திருக்கலாம். நீ மாவைத் தயாரிக்கத் தொடங்குகிறாய், பின்னர் கேக் செய்யும்படி அதை அடுப்பில் வைக்கிறாய். ஆனால் அதற்கு முன், நீ அந்த மாவை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

வெந்து கேக்காக மாறாத மாவுக்கு குறிப்பிட்ட வடிவம் இருப்பதில்லை. அது ஒரு கேக் வடிவத்தைக் கொண்டிருப்பதில்லை… அது திரவ நிலையில், இசைந்து கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது நீ தேர்ந்தெடுக்கும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்றுக்கொள்ளும். பாத்திரம் வட்டமாக இருந்தால், கேக்கும் வட்டமாக இருக்கும். பாத்திரம் சதுரமாக இருந்தால், கேக்கும் சதுரமாக இருக்கும்! மாவு பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துக்கொள்ளும்.

உன் வாழ்க்கையிலும் அப்படித்தான் நடக்கிறது! நீ ஆண்டவருடைய பிரசன்னத்தில் நேரத்தைச் செலவிடும்போது, அவருடைய ஆவியானவர் உன் வாழ்வில் கிரியையை செய்து இயேசுவின் சுபாவங்களை உனக்குள் வைக்க நீ அனுமதிக்கிறாய். (யோவான் 14:26). ஆண்டவருடைய பிரசன்னமானது இந்த பேக்கிங் பாத்திரத்தைப் போலவே, உன்னை வடிவமைத்து மாற்றுகிறது.

ஆகவே, நீ மாவுபோல் இருக்கிறாய்… அதனால்தான் “முதலில்” பேக்கிங் பாத்திரத்தில், அதாவது உன் பரலோகப் பிதாவின் பிரசன்னத்தில் அதிக நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது! உனக்குள் இருக்கிற எல்லாவற்றையும் ஆண்டவர் அழிக்கப் போவதில்லை. உன் விசேஷித்த தன்மையை மதித்து ஆண்டவர் உன்னை வடிவமைக்கப் போகிறார்.

பேக்கிங் கேக் விரிவடைந்து பொன்னிறமாகும் வரை பெருகி அதிகரிப்பதைப் போலவே, ஆண்டவருடைய பிரசன்னம் உன் வாழ்வில் உன் வளர்ச்சிக்கான தூண்டுகோலாக செயல்படுகிறது. வேதாகமம் சொல்வதுபோல் நீ வெற்றி மேல் வெற்றி சிறந்து, மகிமையின் மேல் மகிமையடையும் நிலைக்குக் கூட செல்வாய்! (2 கொரிந்தியர் 3:18)

இந்த நாளில் நீ ஆசீர்வாதத்தோடும் உற்சாகமாகவும் இருப்பாயாக!

பரிசுத்த ஆவியானவர்… கிரியை செய்கிறார்: நீ ஆண்டவருடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிடும்போது, மகிமையின்மேல் மகிமையடைவாய்!

“பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்” எனும் இந்தப் பாடலைப் பாடி ஆண்டவரது சமூகத்தில் நேரத்தை செலவிடுவாயாக! https://youtu.be/TsAIJCc2B70?si=JSazfi-U_iFbrckv

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!