இயேசுவைப் பகர்வதன் மூலம் ஒரு ஆத்துமாவைக் காப்பாற்றலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவைப் பகர்வதன் மூலம் ஒரு ஆத்துமாவைக் காப்பாற்றலாம்!

“நீ தைரியமாக வெளியேறி இயேசுவைப் பற்றி சாட்சி பகர்வதன் மூலம் ஒருவர் இயேசுவை அறிந்துகொண்டால் எப்படி இருக்கும்?”

ஒரு இஸ்லாமியப் பெண் கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தைப் பற்றி உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ சகோதரர், தான் விசுவாசித்த உண்மையை அந்தப் பெண்ணிடம் தெரிவிக்க விரும்பினார்… அதனால் அந்தக் கிறிஸ்தவர் அந்த முஸ்லீம் பெண்ணிடம் ஒரு வேதாகமத்தைக் கொடுத்தார். அவள் அதை வாங்கிக்கொண்டு, வாசிக்கத் துவங்கினாள்.

இந்த சந்திப்பு அப்பெண்ணின் ஆழமான நம்பிக்கைகளைத் தடுமாறச் செய்தது. அவள் முழு மனதுடன் சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், கடைசியில் இயேசுவைக் கண்டுபிடித்தாள். அவள் கண்டறிந்த உண்மையின் ஆழத்தை இவ்வாறாக அறிக்கையிட்டாள், “போதும், போதும்… இயேசுவை நம்புவதை விட, இயேசுவை நம்பாமல் இருப்பதற்கே எனக்கு அதிக விசுவாசம் தேவைப்படுகிறது!” என்று சொன்னாள்.

என்ன ஒரு மனதைத் தொடும் அறிக்கை! ஆம், இயேசு உண்மையிலேயே இருக்கிறார் என்று அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வதைவிட… இயேசு இல்லை என்று நம்புவதற்கு‌ அதிகமான விசுவாசம் தேவைப்படுகிறது.

உன் விசுவாசத்தை உன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன். துணிவுடன் இரு! தைரியமாக இரு! பயப்படாதே. பேசுவதற்கு உனக்குத் தேவையான வார்த்தைகளை ஆண்டவர் கொடுப்பார்.

“… அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.” (மாற்கு 13:11)

இயற்கைக்கு அப்பாற்பட்டவராகிய ஆண்டவர் உனக்குச் செய்பவைகளை நினைத்து நீ ஆச்சரியப்படலாம்! சத்தியத்தை நீ உனக்குள் அடக்கி வைத்துக் கொள்ளாதே… இத்தகைய பெரிய அதிசயம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனது தினசரி தியானத்தின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மின்னஞ்சல்களைத் திறக்க தினமும் காலையில் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பலமுறை, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் என் வாழ்வின் ஒரு சூழ்நிலையை நேரடியாகப் பேசியிருக்கிறது. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அவை எனக்கு உறுதிப்படுத்துகின்றன. ஆண்டவர் என்னிடம் பேசுகிறார், அவர் ஆளுகை செய்பவர் மற்றும் நியாயாதிபதி என்ற எனது முந்தைய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டு, இப்போது அவரை என் தந்தையாகவும் நண்பராகவும் பார்க்கிறேன்; உண்மையிலேயே அவர் எனக்கு அவ்வாறுதான் இருக்கிறார். நான் இனிமேல் குறையுள்ளவளாக இருப்பதில்லை என்று உணர்கிறேன். அவர் நேசிக்கும், அவரது சிருஷ்டிப்புதான் நான் என்பதை உணர்கிறேன். நான் செய்ய வேண்டியது எல்லாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். அன்புதான் முக்கியம்! நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” (விமலா மேரி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!