இயேசுவே வழி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவே வழி!

செல்வி, மரியாள் மற்றும் ரம்யா ஆகியோரைப் போலவே… அநேகர், தங்களது விசுவாசப் பயணங்களில் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்படிக்கு எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

“அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியானத்தின் மூலம், தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்படி அதைப் பயன்படுத்த தேவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார், ஏனென்றால் அவருடைய சித்தத்தை அறிந்துகொண்டால் மட்டும் போதாது… நாம் அதை வாழ்ந்துகாட்ட வேண்டும், விசுவாசிக்க வேண்டும், அதை நம் வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.” செல்வி.

“இன்று, இயேசு அனுதினமும் என் அருகில் இருக்கிறார் என்றும், தீர்க்கமுடியாத பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த எனக்கு, அதைத் தீர்க்கும்படியான வழிகளை அவர் காட்டுகிறார் என்றும் என்னால் சொல்ல முடியும்.” மரியாள்.

“நான் ஒரு கடினமான காலகட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறேன்… அது ஒன்றன் பின் ஒன்றாக என்னைத் தாக்கிக்கொண்டிருந்தது, நான் உங்களிடத்திற்கு தேவனால் வழிநடத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும். நான் உதவிக்காக அழுதுகொண்டிருந்தேன், உதவி கிடைத்துவிட்டது. இன்று தேவன் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பாராக.” ரம்யா

எத்தனை ஊக்கமளிக்கும் சாட்சிகள் இவை! ஆம், இயேசு உன் அருகில் இருக்கிறார். “நானே வழி” என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர்தான் ஒவ்வொரு நாளும் உனக்கு அருகில் உன்னோடு கூட நடக்கிறவர். (வேதாகமத்தில் யோவான் 14:6 ஐப் பார்க்கவும்)

நீ சோதனைகளையும் கஷ்டங்களையும் சந்திப்பாயானால் அல்லது உன் பாதையில் மலைகள் உயர்ந்து நின்று உன்னை சோர்ந்துபோகச் செய்தால், அதிர்ச்சியடைய வேண்டாம். நீ சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறாய்! சோர்ந்துபோக வேண்டாம், உன்னை நேசித்து உன்னை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் சர்வவல்லமையுள்ள தேவனோடு கூட நீ நடந்துகொண்டிருக்கிறாய் என்பதை அறிந்துகொள். உன்னை சுமந்துசெல்ல வேண்டிய அவசியம் வரும்போது, அவர் உன்னை சுமந்து செல்வார்.

இயேசு உன்னோடு கூட இருக்கிறார். அவர் உன்னை மதில்போல் சூழ்ந்து நிற்கிறார். அவர் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் உன்னை உயர்த்துகிறார். உனது இன்றைய கஷ்டமானது, தேவன் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த பயன்படுத்தும் நாளைய விதையாகும். கர்த்தர் உன்னைத் தனியே விட்டுவிடமாட்டார்… ஒருபோதும் அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். மாறாக, அவருடன் இணைந்து நடக்க அவர் உன்னை அழைக்கிறார். நீ இயேசுவைப் பின்பற்றும்படி அழைக்கப்பட்டிருக்கிறாய்.

நாம் ஒன்றாக இணைந்து ஜெபிப்போம்: “இயேசுவே, நீர் என்னுடன் இருக்கிறீர். நீர் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறீர் மற்றும் என்னை உயர்த்துகிறீர். எனது இன்றைய கஷ்டமானது, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்படிக்கு, நாளை நீர் பயன்படுத்தப்போகிற விதையாக இருப்பதற்காய் நன்றி. நான் பின்பற்றும் வழி நீரே! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!