இயேசுவின் இதயத்திற்கேற்ப உன்னை சரிசெய்துகொள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவின் இதயத்திற்கேற்ப உன்னை சரிசெய்துகொள்

“இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” (ஆமோஸ் 3:3)

இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகள் அல்லது குரல்களை சரிபார்த்து துல்லியமாக்க பயன்படுத்துவது இசைக்கவடு (tuning fork) என்னும் கருவி. இந்த கருவி தூய்மையான ஒலியை வெளியிடுகிறது.

இன்று, என் அன்பரே, உன் இதயத்தை இயேசுவின் இதயத்துடன் இணைக்கவும்! இசைக்கவடு ஒரு சுவரத்தை கொடுக்கிறது (பொதுவாக முதல் சுவரம்). இந்த கருவியை பயன்படுத்தி நாம் மற்ற கருவியில் உள்ள குறைகளை சரிசெய்யலாம், ஆகையால் இந்த கருவிக்கு நன்றி. ஆண்டவருடன் ஒரு ஜீவனுள்ள உறவில் நீ இருக்கும் போது, உன் இதயமும் எண்ணங்களும் அவருடைய எண்ணங்களுடன் ஒத்துப்போகும், நீ அவருடன் இணக்கமாக இருக்கிறாய். உன் வாழ்க்கை அவரைப் போலவே துடிப்பாகவும் உயிரோட்டமாகவும் மாறும்!

நீ ஆண்டவருடைய எதிரொலியாக மாறுகிறாய்… நீ அவருக்காகவும் அவரைப் போலவும் எதிரொலிக்கிறாய்; பின்வரும் சாட்சியங்களைப் போல், நீ அவருடைய இதயத்தை பிரதிபலிக்கிறாய்.

“ஒவ்வொரு நாளும் இந்த ஊக்கமளிக்கும் செய்திகளுக்கு மிக்க நன்றி. இது என்னை ஊக்குவிக்கிறது மற்றும் நான் பலப்படுத்தப்படுகிறேன். உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக” – Caroline

“உங்கள் மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. மிகப் பெரிய ஆதரவும் ஊக்கமும்” – Pavithra Vidhyashini, Sri Lanka

“உங்க ஆலோசனை எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது என்னை தேற்றுகிறது, என்னை ஆற்றுகிறது, என்னை பெலபடுத்துகிறது.கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் அனுப்புகிற வார்த்தையை வாசிக்கும் போது என் ஆவியில் களி கூறுகிறேன். கர்த்தருக்கென்று வைராக்கியமாய் எழும்பி சாதிக்க வேண்டும் என்று என் ஆவியில் உணர்த்தப்படுகிறேன். உங்க மூலமாக கர்த்தர் என்னை தேற்றுவதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்” – Chitra, Tirunelveli

என் அன்பரே, இயேசுவின் ஒலியை இன்று ஒலிப்போம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!