இப்போது உற்சாகத்திற்கான நேரம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இப்போது உற்சாகத்திற்கான நேரம்!

கடந்த சில நாட்களாக நாம் மன உளைச்சலைப் பற்றி தியானித்த விஷயங்களால் நீங்கள் மிக பெரிய அளவில் உற்சாகத்தைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உற்சாகம் அளிக்கும் மற்றும் வல்லமை வாய்ந்த சாட்சிகளைப் படிக்க நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஆண்டவர் செய்வது நிச்சயமாகவே விஷேசமான ஒன்றாகத்தான் இருக்கும்.

“நான் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் காணப்பட்டேன், நான் என் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் ‘அனுதினமும் ஒரு அற்புதம்’ என்ற இந்தக் கடிதத்தைப் படித்தபோது நான் ஆண்டவருடைய பிள்ளை என்பதை உணர்ந்தேன். யாரோ ஒருவர் ஏற்கனவே ஏன் ஜீவனுக்காக விலையை செலுத்தி இருக்கிறார். நான் இனி எனக்குச் சொந்தம் அல்ல என்று அறிந்துகொண்டேன். இன்று நான் தற்கொலை செய்வதைப் பற்றியோ கைவிடுவதைப் பற்றியோ எதிர்மறையானவகைகளைப் பற்றியோ யோசிப்பதே இல்லை. நான் வாழவேண்டும், ஆண்டவருடைய மகத்துவங்களை அறிவிக்கவேண்டும்!” ஷீலா

“என்னைக் காயப்படுத்திய ஜனங்களை மன்னிக்க ஆண்டவர் எனக்கு பலம் கொடுத்தார். இன்று நான் என் வாழ்க்கையின் பக்கத்தைத் திருப்பி ஆண்டவருடன் கூடிய என் பிரயாணத்தில் முன்னேறிச் செல்கிறேன். என்னை பலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.” வனேஸா

என் வாழ்க்கையில் நான் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த நேரத்தில் ‘அனுதினமும் ஒரு அற்புதம்’ என்ற இந்த செய்தியை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆண்டவர் இன்னும் என் வாழ்க்கையில் கிரியை செய்யவில்லையே என்று எண்ணி நான் மிகவும் சோர்வுடன் காணப்பட்டேன். எப்படி முன்னேறிச் செல்வது என்று கூட எனக்குப் புரியவில்லை. ‘அனுதினமும் ஒரு அற்புதம்’ என்ற இந்தக் கடிதத்தைப் பெறுவது எனது மீட்பின் மிகப் பெரிய அங்கமாக மாறியது. இந்த கடிதங்கள் மூலம் நான் பெற்ற உற்சாகமானது, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் மற்றும் அவருடைய அன்பு நம்மீது எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை எனக்கு நினைவுபடுத்தியது. இப்போது நான் விடுதலையுடன் புதிய பார்வை மற்றும் நோக்கத்தை உடையவளாகி தேவனுடைய ராஜ்யத்தில் மிகப்பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன். ஆரோன்

இந்த சாட்சிகள் உங்களை உற்சாகப்படுத்தி உங்களை பலப்படுத்தும் என்று நம்புகிறேன். நம்முடைய ஆண்டவர் மிகவும் பெரியவர், மிகவும் நல்லவர், மிகவும் அற்புதமானவர். ஓ! அவருடைய அன்பு எவ்வளவு மகத்தானது மற்றும் அவருடைய உண்மை எவ்வளவு பெரியது!

சங்கீதக்காரன் இதை நன்றாகக் கூறுகிறான்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.” (வேதாகமம், சங்கீதம் 57:10)

முடிவில்லாத மிக கடினமான சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்துக் கொண்டு இருப்பீர்களானால், நீங்கள் என் நினைவுகளில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை பலப்படுத்தி உற்சாகப்படுத்தும் படி நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!