இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வல்லமை உனக்குள் இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வல்லமை உனக்குள் இருக்கிறது!

சூப்பர் சக்திகளைப் பற்றி யார்தான் கனவு காணாதிருப்பார்கள்?

“ஆ… மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி இப்போதே என்னால் மறைந்துபோக முடியுமானால் எப்படி இருக்கும்…”, “ஆஹா… என்னால் உயரமாக பறக்க முடிந்து, காற்றில் உயர எழும்பினால் எப்படி இருக்கும்…”

நல்ல வேளை, நம்மிடம் அப்படிப்பட்ட சக்திகள் இல்லை! (இதுதான் நல்லது, இல்லையா?)

இருந்தபோதிலும், நமக்குள் ஒரு மிகப்பெரிய வல்லமை உண்டு: நம்மில் இயேசு ஜீவிக்கிறார்!
“உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் 1 யோவான் 4:4 ஐப் பார்க்கவும்)

எனவே, இயேசு உனக்குள் வசிப்பதால், உன் சொந்த ஆற்றலை மிஞ்சும் அல்லது உலகத்தின் ஆற்றலை மிஞ்சும் ஒரு வல்லமையை நீ பெற்றுக்கொள்ள உனக்கு அதிகாரம் உண்டு!

நீ களைத்துப்போய் பெலனற்று இருக்கும்போதும், ஒரு காரியத்தை செய்ய அதற்குமேல் உன்னால் முயற்சிக்க முடியாதபோதும், ​​இயேசுதாமே உன்னில் வாழ்கிறார் என்பதை நினைவில் கொள்.

மேலும், உலகத்தில் இருப்பவனை விட, உன்னை சோர்வடையச் செய்ய முயற்சிப்பவனை விட, உனக்குள் இருப்பவர் பெரியவர்.

ஆம், இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர், மேலும் அவர் எல்லாவற்றையும் விட வலிமையானவரும், அதிக வல்லமை வாய்ந்தவருமாய் இருக்கிறார்!

அவருடைய ஆற்றல் உனக்குள் இருப்பதாக!

சாட்சி: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த தினசரி ஊக்கமளிக்கும் மின்னஞ்சலானது ஒவ்வொரு நாளும், எனக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த செய்திகளின் மூலமாக சகோதரர் எரிக் அளிக்கும் ஊக்கமும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் தேவையாய் இருந்த பெலனின் வாய்க்காலாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை எனக்கு கடினமாக இருந்து வந்தது, மேலும் கடினமான நாட்களில் போராடி ஜெயிக்க தேவனுடைய வார்த்தை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனாக, நான் சில சமயங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறேன், மற்றும் என் வாழ்க்கையில் தேவனுடைய வழிநடத்துதலை சந்தேகப்படுகிறேனோ என்று நினைக்கிறேன்.
சகோதரர் எரிக் அவர்களின் செய்தி எனக்குத் தெளிவை அளிக்கிறது மற்றும் என் மனதிலும் இருதயத்திலும் உள்ள குழப்பத்தை நீக்குகிறது. தேவன் என் வாழ்க்கைக்கான ஒரு திட்டத்தை வைத்திருப்பது எனக்குத் தெரியும், சில சமயங்களில் என் வாழ்க்கையில் நான் சென்றுகொண்டிருக்கும் திசைகளை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்றாலும், கர்த்தர் செய்துகொண்டிருப்பதை அவர் அறிவார் என்றும், மிகத் தீவிரமானதும் உணர்வுப்பூர்வமானதுமான விசுவாசத்தின் மூலம், நான் எங்கு இருக்க வேண்டுமோ, அந்த இடத்திற்கு அவர் என்னைக் கொண்டு சேர்ப்பார் என்றும் நான் நம்புகிறேன். சகோதரர் எரிக் அவர்களின் தினசரி ஊக்க செய்தி அந்த நம்பிக்கைகளை மீண்டும் எனக்கு உறுதிப்படுத்துகிறது, அதோடு கூட, தினமும் இந்த அன்பையும் ஊக்கத்தையும் எனக்கு வழங்கும் எரிக் அவர்களுக்காகவும் அவரது அற்புதமான ஊழியர்களுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன்தாமே அவர்களை ஆசிர்வதிப்பாராக!”
(தானியேல்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!