இன்றைய நாள் உனக்கு ஒரு புதிய ஆரம்பமாய் இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்றைய நாள் உனக்கு ஒரு புதிய ஆரம்பமாய் இருக்கிறது!

இன்று, ஒரு புதிய நாள்… ஒரு புதிய வாரம்!… ஆரம்பமாகிறது!

வேதாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (வேதாகமத்தில் புலம்பல் 3:22-23ஐப் பார்க்கவும்)

ஒவ்வொரு நாள் காலையிலும் அவருடைய இரக்கங்கள் புதியவையாக இருப்பதுபோல, வாய்ப்புகளும் கூட புதியவையாக இருக்கின்றன!

  • நேற்றிரவு நீ ஏமாற்றத்தோடு தூங்கச் சென்றாயா?… இன்று காலை உனக்கு ஒரு புதிய தொடக்கம் காத்திருக்கிறது!
  • நேற்று ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கையில் நீ நியாயமில்லாமலோ அல்லது தவறாகவோ கோபப்பட்டாயா?… இன்று, ஆண்டவரின் மன்னிப்பு ஏற்கனவே எல்லாவற்றையும் மன்னித்துவிட்டது.
  • நேற்று, நீ மனதளவில் சோர்வடைந்துபோனாயா, தனிமையாக இருந்தாயா அல்லது வருத்தமடைந்தாயா?…இன்று காலை வேளையில் தேவனுடைய இரக்கமும் நன்மையும் உனக்கு மீண்டும் நம்பிக்கையளிக்கிறது.

அனைத்துமே மறுபடியும் சாத்தியம்தான், எல்லாம் கூடும், ஏனென்றால் இன்று ஆண்டவர் இங்கேதான் இருக்கிறார், அவர் உனக்கு அருகில் இருக்கிறார்.

அவர் மிகவும் நல்லவர். நீ என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை, நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே அவர் உன்னை நேசிக்கிறார். உன் வாழ்க்கைப் பாதையில் அவர் உன்னோடு கூட வருகிறார். பயணம் சில சமயங்களில் சிக்கலானதாகவும் தடைகள் நிறைந்ததாகவும் இருக்கக் கூடும், ஆனால் ஆண்டவர், உன் பிதா-உன் அப்பா-எப்போதும் உன் பக்கத்திலேயே இருக்கிறார்…அவர் உன் மீது எப்போதும் இரக்கமாய் இருப்பார்.

இன்று காலையில் அவருடைய இரக்கங்கள் உனக்குப் புதியவைகளாய் இருக்கின்றன!

“நான் தினமும் காலையில் எழும்போது, பாடுகளும் ஏமாற்றமும் நிறைந்த ஒரு புதிய நாள் வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டு, துக்கத்தோடே எழும்புவதுண்டு. ஆனால், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலை வாசிக்கத் துவங்கியதிலிருந்து, என் இருதயம் நம்பிக்கையால் நிரம்பியிருக்கிறது. எனது நிலைமை நிரந்தரமாக இப்படியே இருந்துவிடாது என்ற நம்பிக்கை பிறந்து, எனது மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது. இயேசு என்னை நேசிப்பதால் நான் தகுதியானவள் என்பதையும் என் வாழ்விற்கு மதிப்பு உண்டு என்பதையும் இப்போது நான் அறிந்துகொண்டேன். நான் சரியான நபருடைய கரங்களில் இருக்கிறேன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்.”(வனஜா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!