இன்றே இயேசுவின் நாமத்தில் ஜெபி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்றே இயேசுவின் நாமத்தில் ஜெபி!

நாம் ஏன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று உனக்குத் தெரியுமா? நாம் ஜெபிக்கும்போது ஏன் அவருடைய நாமத்தை எப்போதும் பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா?

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்று தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்வதற்கு முன், தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற இந்த வாக்குத்தத்தத்தை நீ அறிந்திருக்கக்கூடும்…

“விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே … வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”
(வேதாகமத்தில் மாற்கு 16:17-18ஐப் பார்க்கவும்)

இயேசுவே தம்முடைய நாமத்தில் ஜெபிக்கும்படி நம்மை ஊக்குவிக்கிறார்! பிதாவானவர் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை இயேசுவுக்குத் தந்தருளினார். அவர் இதை வேறு யாருக்கும் தந்தருளவில்லை, ஒரு தேவதூதருக்குக் கூட தரவில்லை. தேவதூதர்களையும், மற்ற எவரையும் காட்டிலும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் தேவனுடைய குமாரன் இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது.

“நீர் என்னுடைய குமாரன்” என்று ஒருபோதும் தேவன் ஒரு தேவதூதனிடமும் சொன்னதில்லை. “நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார்” என்று அவர் ஒருபோதும் எந்த தேவதூதனிடத்திலும் சொன்னதில்லை. (வேதாகமத்தில் எபிரேயர் 1:5ஐப் பார்க்கவும்)

உண்மையில், தேவதூதர்கள் இயேசுவைப் பணிந்து ஆராதிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய ஊழியர்களாய் இருக்கிறார்கள், இயேசு ஆண்டவராய் இருக்கிறார். அவருடைய இராஜரீக வல்லமை என்றென்றும் நிலைத்திருக்கும்! “நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்,” என்று தேவதூதனிடம் ஒருபோதும் பிதாவானவர் சொன்னதில்லை ஆனால் அவர் அதை இயேசுவிடம் கூறினார்.

பார்த்தாயா என் நண்பனே/தோழியே? தேவதூதர்கள் எல்லாரையும் விட இயேசு மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் நாமம் எல்லாவற்றிற்கும் மேலானது!

இன்றே இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க உன்னை உற்சாகப்படுத்துகிறேன். ஏனெனில், இந்தப் பாடல் பறைசாற்றுகிறதுபோல, இயேசுவின் நாமத்தில் வல்லமை இருக்கிறது.
https://youtu.be/wF8-e5x-pJM?si=El3ThH8783fkYn5n

இந்த நாமமே எல்லா நாமங்களுக்கும் மேலானது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!