இன்று உன்னை கவலைக்குள்ளாக்குவது எது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று உன்னை கவலைக்குள்ளாக்குவது எது?

“கவலையை மேற்கொள்ளுதல்” என்ற தொடரை புதிதாக இன்று நாம் தியானிக்கத் தொடங்குகிறோம். இது எனக்குப் பிடித்த வேத வசனமான பிலிப்பியர் 4:6-7 வரையுள்ள வசனங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆண்டவருடைய வார்த்தையின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலமும் அனைத்து கவலைகளிலிருந்தும் உன்னால் விடுபட முடியும், இதை நான் விசுவாசிக்கிறேன்! இந்த வாரத் தொடர் உன் விசுவாசத்தை பலப்படுத்தும் என்று முழு மனதுடன் நம்புகிறேன்.

நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம்: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6-7)

இன்று உன் கவலை என்ன?

  • உன் பொருளாதார நிலைமையைப் பற்றி நீ கவலைப்படுகிறாயா?
  • உன் பள்ளி படிப்பில் தேர்ச்சியடைவது எப்படி அல்லது சிறப்பாக செயல்படுவது எப்படி என்று கவலைப்படுகிறாயா?
  • உன் சரீர ஆரோக்கியம் அல்லது உன் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுகிறாயா?
  • நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாயா?

என்னைப் பொறுத்தவரை, என்னைப் பற்றிய மற்றவர்களின் பார்வைகள் எப்படி இருக்கும் என்றும், என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் நான் நீண்ட காலமாக மிகவும் கவலைப்பட்டு வந்தேன்.

இப்போதும் நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டும்: நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படி இருக்கும்? பொறுப்பற்று முதிர்ச்சியடையாத நபராக இருப்பதைப் பற்றியோ அல்லது ஒன்றும் செய்யாமல் இருப்பதைப் பற்றியோ நான் இங்கு பேசவில்லை; மாறாக, உன்னால் கட்டுப்படுத்த முடியாததை முழுவதுமாக அவரிடம் விட்டுவிடுகிற வாழ்க்கையை வாழ்வதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
.
இயேசு தம்முடைய வார்த்தையில் நன்றாகச் சொல்லியிருக்கிறார்: “பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (லூக்கா 12:22, லூக்கா 12:25, லூக்கா 12:31)

சிரமங்கள் பெரும்பாலும் வெளிப்புறமாகக் காணப்படும், ஆனால் கவலைகளோ உன்னை ஆழ் மனதில் தாக்கிவிடும். நீயும் என்னைப்போல் இருப்பாயானால், உன் எண்ணங்கள் என்ன சொல்கிறது என்பதை நீ எளிதில் நம்பிவிடுவாய்! உண்மையில், அவை யதார்த்தத்துக்கு மாறானதாக இருக்கிறது என்றாலும், இல்லாதவற்றை அல்லது நடக்காதவற்றைக் குறித்து நம் உள்ளுணர்வு சொல்பவற்றை நம்பி நாம் கவலைப்படுகிறோம்.

ஒவ்வொரு நாளும் படிப்படியாக எல்லா கவலைகளிலிருந்தும் என்னை விடுவிக்குமாறு நான் ஆண்டவரிடத்தில் வேண்டுகிறேன். அதைச் செய்ய எனக்கு அவரது உதவி தேவை. நான் செய்ய விரும்புவது இதுதான்:

  • என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்: நான் அவரிடத்துக்குத் திரும்பி, என் சூழ்நிலையை மேற்கொள்ள என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
  • பிறகு என்னால் செய்ய முடியாத, சாத்தியமற்றவைகளை‌ அவரது கரங்களில் விட்டுவிடுகிறேன்: உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் அதைத்தான் செய்கிறேன்.

இன்று உனக்கான எனது ஜெபம் இதுதான், நீ உன் பங்கை (உன்னால் முடிந்ததை) செய் மற்றும் ஆண்டவர் தமது பங்கை (செய்யக் கூடியதை) செய்யட்டும்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!