இன்று உணர்வுடன் இரு …
முகப்பு ›› அற்புதங்கள் ››
குறிப்பாக உன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளுக்கேற்ப நீ உணர்வுள்ள நபராய் இன்றே இருக்கும்படி உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
நீ வேலைக்கோ அல்லது திருச்சபைக்கோ போகிற வேளையில் அல்லது உன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது கூட, உன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் தனிமையில் மிகவும் பாரமான சுமைகளை சுமந்துகொண்டிருக்கிறார்களா என்பதைப் பகுத்துணர பரிசுத்த ஆவியானவரிடம் கேள்.
அவர்கள் பாரத்தோடு இருக்கிறார்கள் என்பதைப் போல நீ உணர்ந்தால், நீ: “உன் வாழ்க்கையில் என்ன நடந்தது? இன்று நான் உனக்காக எப்படி ஜெபிக்கலாம்?” என்று அவர்களிடம் கேள்.
அவர்களுக்கு நிம்மதியையும் விடுதலையையும் கொண்டுவருவதற்கு ஆண்டவர் உன்னைப் பயன்படுத்துவாராக! அவர்கள் சொல்வதை கவனமாய் காது கொடுத்துக் கேட்பது, ஆண்டவருடைய இருதயத்திலிருந்து வரும் விலையேறப்பெற்ற ஒன்றை அவர்களுக்குக் கொடுக்கும்.
ஒருவருக்கு தன் பிரச்சனையை மேற்கொள்ள உதவுவதற்கு நீ அவர்கள் சொல்வதைத் கேட்க தயாராக இருந்தாலே போதுமானது. சில சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொள்வது மிகவும் கடினம், ஆனாலும் தான் சொல்வதை ஒருவர் கவனிக்கிறார் என்பதை உணர்வது அநேக துக்கங்களைக் குறைத்துவிடும்.
இன்று கவனத்தோடு இரு, ஏனென்றால் நீ ஒருவரின் வாழ்க்கைக்கு அற்புதமாக விளங்கலாம்!
என்னுடன் சேர்ந்து ஜெபிக்கவும்: “ஆண்டவரே, இன்று உம்மைப்போல மற்றவர்களுக்கும், அவர்களின் தேவைகளுக்கும் ஏற்ப உணர்வுள்ளம் உடைய நபராக இருக்க எனக்கு உதவுவீராக. என் பாதையில் நீர் வைத்திருக்கிற காயப்பட்டிருக்கும் மக்களைப் பார்க்க எனக்கு உதவுமாறு நான் ஜெபம் செய்கிறேன். நன்றாகக் கேட்கவும் ஊக்கமளிக்கவும் நீர் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.“
