இன்று, இந்தச் சவாலை எதிர்கொள்ள உன்னை அழைக்கிறேன்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று, இந்தச் சவாலை எதிர்கொள்ள உன்னை அழைக்கிறேன்!

“நாம் ஆண்டவரை நோக்கிப் பார்க்கும்போது, மகிழ்ச்சியால் பிரகாசிக்கிறோம்.”

ஜனங்கள் சந்திக்கும் எல்லா வகையான சவால்களையும் நீ கவனித்திருப்பாய் என்று நான் நம்புகிறேன்!

இன்று, நான் உனக்கு ஒரு வித்தியாசமான சவாலை வழங்க விரும்புகிறேன். இது உனக்கு நன்மைக்கு ஏதுவானதாக இருக்கும் என்றும் ஆண்டவருடனான உன் உறவை வளர்க்க உதவும் என்றும் நான் நம்புகிறேன். நாம் ஆண்டவரைப் பார்க்கும்போது,​ நாம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கிறோம் என்று வேதாகமம் சொல்கிறது. (சங்கீதம் 34:5)

ஆகவே இதோ உனக்கான சவால்: இந்த நாள் முழுவதும் மற்றும் இந்த வாரம் இறுதி நாள் வரைக்கும் உன் எண்ணங்களை இயேசுவுக்கு நேராகத் திருப்பு! எவ்வளவு நேரம் உன் எண்ணங்களை இயேசுவுக்கு நேராகத் திருப்புவது? ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையா அல்லது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு முறையா? அது உன்னுடைய விருப்பம்!

உனக்கு ஞாபகப்படுத்த, உன் கைபேசியில் அலாரத்தை வைத்துக்கொள்ளலாம் அல்லவா? ஒருமுறை நான் இதை பல நாட்களாக செய்து வந்தேன், என் தொலைபேசி ஒவ்வொரு நிமிடமும் “டிங்” என்று ஒலி எழுப்பி எனக்கு நினைவூட்டியது… அது இதேபோல தொடர்ந்து ஒலித்தது. எப்படியோ, கிட்டத்தட்ட நான் இயேசுவைப் பற்றி எப்போதும் சிந்தித்து, இடைவிடாமல் ஜெபித்தேன்.

ஆகவே, அடுத்த சில நாட்களுக்கு நீ இந்தச் சவாலை எடுத்துக்கொள்வாயா? ஆண்டவருடன் நேரத்தை செலவிடுவதும், நாள் முழுவதும் அவருடன் உறையாடுவதும் நீ சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் இருக்க மிகச்சிறந்த வழி என்பதை உணர்வாய்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஒவ்வொரு நாள் காலையிலும் நான் ஜீவனோடு எழுந்திருப்பதை எண்ணி மிகவும் ஊக்கமும் உற்சாகமுமடைகிறேன், ஆண்டவருடைய ஊழியக்காரனாகவும், பிள்ளையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நண்பனாகவும் இருக்கத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன். நான் சில நேரங்களில் காலையில் எழும்போது, மனச்சோர்வுடனும், உடல் சோர்வுடனும், நம்பிக்கையில்லாமல், காயப்பட்டவனாக, குழப்பத்துடன் எழுந்திருக்கிறேன். நான் எனது மின்னஞ்சலைத் திறந்து வாசித்து, ஆண்டவரிடமிருந்து ஒரு வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது,​ அது என் ஆவியில் உறுதிப்படுத்தப்பட்டு, ஆண்டவரே என்னோடு பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளும்போது, அது ஒரு சிறந்த நாளாகவும் வித்தியாசமான நாளாகவும் இருக்கிறது. என்னுடைய அழுகையையும் ஜெபத்தையும் அவர் கேட்கிறார் என்பதை நான் அறிவேன். மேலும் மின்னஞ்சலில் இடம்பெற்றுள்ள ஆராதனைப் பாடலும் ‘இயேசுவுக்கே துதி உண்டாவதாக’ பகுதியும் மிக அருமையாக உள்ளது. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். உங்களது மின்னஞ்சல் எனது தியான நேரத்தை ஆச்சரியமானதாகவும் அற்புதமானதாகவும் ஆக்குகிறது.” (ஆல்வின்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!