இன்னும் தாமதமாகிவிடவில்லை

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்னும் தாமதமாகிவிடவில்லை

இன்று, வேதாகமத்திலிருந்து சில வசனங்களைப் வாசிப்பதன் மூலம் ஆரம்பிக்கலாம்…

“அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம், அப்படி வேண்டாம், சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். அப்போழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரியக் கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.” (வேதாகமத்தில் 2 ராஜாக்கள் 20:9-11 ஐ வாசிக்கவும்)

என்ன ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம்! நேரம் பின்னோக்கி நகர்ந்தது…

உன் திட்டம் எதுவாக இருந்தாலும் சரி, உன் கனவு எதுவாக இருந்தாலும் சரி, “நேரம்” உன் வழியைத் தடை செய்ய விடாதே. நீ மிகவும் வயதான ஒருவராகவோ அல்லது மிகவும் இளமையான ஒருவராகவோ ஆகிவிடவில்லை… அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது, ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ இன்னும் நேரம் இருக்கிறது!

களிகூறுங்கள், ஏனெனில் இன்னும் தாமதமாகவில்லை…

  • கனவு காண்பதற்கும்,
  • நம்பிக்கை வைப்பதற்கும்,
  • ஏதையாவது ஆரம்பிப்பதற்கும், அல்லது
  • மறுபடியும் தொடங்குவதற்கும்

இன்னும் காலதாமதம் ஆகிவிடவில்லை!

எழுந்து இந்த முதல் அடியை எடுத்து வை… இந்த முதல் கல்லை நிலைநிறுத்து. உனக்கு காலதாமதம் ஆகிவிடவில்லை. உன்னை யார் தடுப்பார்கள்? முடியாது என்று யார் சொல்வார்கள்? மிகக்கடினமான சூழ்நிலைகளைப் புரட்டிப்போடுபவரான கர்த்தரே நேரத்தைக் கட்டுப்படுத்துபவராய் இருக்கிறார்.

அவரே உன் வாழ்க்கையின் ஆசிரியர், மேலும் காரியங்களை முடிவுக்குக் கொண்டுவர அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

பலமுள்ளவராக இரு… நேரம் மற்றும் சூழ்நிலைகளின் எஜமானர் உன் பக்கம் இருக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!