இன்னும் அதிகம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்னும் அதிகம்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉

இந்த வருடம் ஆண்டவரின் அன்பும், சமாதானமும் கிருபையும் நிறைந்த வருடமாக அமைய என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

இதைத் தெரிந்து கொள்ளுங்கள்… உங்களுக்கு இன்னும் அதிகமானவை இருக்கின்றன! என்னுடைய நண்பர் லூக் சொல்வதைப் போல, நிச்சயமாகவே இன்னும் ஏதோ இருக்கிறது! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்காக ஆண்டவர் வைத்திருக்கும் ஏற்பாடுகளும், சந்தோஷமும், தரிசனங்களும் இன்னும் முடிந்துபோய்விடவில்லை என்றும், காணாமல்போய்விடவில்லை என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இன்னும் அதிகமானவைகள் இருக்கின்றன! நிச்சயமாகவே இன்னும் ஏதோ இருக்கிறது!
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (வேதாகமத்தில் மத்தேயு 6:33ஐ வாசிக்கவும்)

இந்த வசனத்தின் கடைசிப் பகுதியின் அர்த்தங்கள் “அதோடு கூட,” “அது தவிர,” “ஏராளமாக” என்பதாகும். அதாவது, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்… அதிகம்! சிலுவை என்பது ஆண்டவருடைய “+” என்ற அடையாளமாய் இருக்கிறது. நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாவற்றையும் இழந்துவிட இயேசு ஒப்புக்கொண்டார்: அதாவது, அதிக சமாதானத்தையும், அதிக சந்தோஷத்தையும், நம் வாழ்வில் அதிகமான வாழ்நாட்களையும், மற்றும் குறிப்பாக, நம் வாழ்நாட்களில் அதிக ஜீவனையும் நாம் பெற்றுக்கொள்வதற்காகத்தான் அவர் எல்லாவற்றையும் இழந்தார்.
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு” (எபேசியர் 3:20) என்று தம்முடைய வார்த்தைகளில், கர்த்தர் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

“மிகவும் அதிகமாய்” (Exceedingly abundantly) என்ற வார்த்தையானது “பெரிசோஸ்” (perissos) என்ற கிரேக்க பதத்திலிருந்து வருகிறது. இதன் அர்த்தம்… தேவைக்கும் அதிகமானது! இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி: உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விடவும் அதிகமாகக் கொடுக்க ஆண்டவர் விரும்புகிறார். அவர் தம்முடைய சொந்த ஜீவனாலும், தம்முடைய அன்பினாலும், மற்றும் தம்மாலேயும்… உங்களை நிரப்பவும் திருப்திப்படுத்தவும் விரும்புகிறார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்காக ஒரு ஆஸ்தி வைத்து வைக்கப்பட்டிருக்கிறது!

இதை விசுவாசி: உனக்காக ஒரு ஆஸ்தி வைக்கப்பட்டிருக்கிறது. உன்னுடைய குடும்பத்திற்காக, உன்னுடைய திருமணத்திற்காக, உன்னுடைய படிப்புக்காக, உன்னுடைய ஆரோக்கியத்திற்காக இன்னும் அதிகமாக இருக்கிறது. இது உன் பிதா உனக்குக் கொடுக்கும் சொத்தாக இருக்கிறது: “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.” (வேதாகமத்தில் கலாத்தியர் 4:6-7ஐ வாசிக்கவும்.)

உன்னுடைய சொத்தில் என்ன இருக்கிறது? நித்திய ஜீவன் இருக்கிறது… அதோடு, இந்த வாழ்க்கைக்கான வாக்குத்தத்தங்களும் கூட இருக்கின்றன. நீ தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, ​தேவன் உன்னுடைய வாழ்க்கையில் முழுமையாக செயல்படுவார் என்று நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், தேவன் வைத்திருக்கிறார்!

இன்று அவருடைய உடைமைகளைப் பெற்றுக்கொள்ளும்படி உன்னுடைய இருதயத்தைத் திறந்துகொடு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!