இனி நீ அழுதுகொண்டிராதே

முகப்பு ›› அற்புதங்கள் ›› இனி நீ அழுதுகொண்டிராதே

“இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 34:6-7ஐப் பார்க்கவும்)

கர்த்தருடைய கண்கள் பூமி முழுவதும் உலாவி சுற்றிப் பார்த்து உன்னைக் காண்கிறது… ஆம், உன்னைக் காண்கிறது! துக்கம், அநீதி, தனிமை, துரோகம் என்று … நீ எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். உன் ஜெபங்களுக்குக் கிடைக்கும் தேவனுடைய பதில்களான, உன் மகிழ்ச்சியான நேரங்கள், மகிழ்ச்சியான முடிவுகள், வெற்றிகள் மற்றும் அவரது பதில்கள் ஆகியவற்றையும் அவர் முன்னதாகவே காண்கிறார்.

ஆம், ஏழை கூப்பிடும்போது, ​​கர்த்தர் கேட்டு, அவனுடைய எல்லா இடுக்கண்களிலிருந்தும் அவனை இரட்சிக்கிறார். ஒன்றிலிருந்து மட்டுமல்ல, எல்லாவற்றிலிருந்தும் அவர் இரட்சிக்கிறார். சிலவற்றிலிருந்து மட்டுமல்ல, அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் இரட்சிக்கிறார்! அதாவது, உனக்கு நிறைவானதும் முழுமையானதுமான ஜெயமும் உன் சத்துருவுக்குப் படுதோல்வியும் கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம்!

  • நீ தேவனுடைய பிள்ளை.
  • நீ அவரது மகிமைக்காக வடிவமைக்கப்பட்டாய், போராடி ஜெயிக்க உருவாக்கப்பட்டாய்.
  • நீ தேவனுடைய பிள்ளை.
  • நீ அவரது கிருபையால் முடிசூட்டப்பட்டு, அவரது மகிமையால் சூழப்பட்டிருக்கிறாய்.
  • நீ தேவனுடைய பிள்ளை.
  • நீ கிறிஸ்துவின் உடன்பங்காளியாக இருக்கிறாய்!

இனியும் நீ அழுதுகொண்டிராதே; உன் கண்ணீரைத் துடைத்துக்கொள். நீ வெற்றிபெறும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்!

என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “ஆமென், இயேசுவே, நான் வெற்றிக்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். நீர் எனக்குச் செவிகொடுத்து, என் எல்லா இடுக்கண்களிலிருந்தும் என்னை இரட்சிப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!