இனி ஒருபோதும் உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› இனி ஒருபோதும் உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்…

ஒருமுறை, “உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கம் உனக்கு இருந்தால், அந்த எண்ணங்களைப் பூட்டிக் கதவை அடைக்க வேண்டிய நேரம் இதுதான்!” என்று ஒருவர் சொன்னார்.

இன்று அந்தக் கதவை அடைப்பதற்கு நான் உனக்கு உதவ விரும்புகிறேன்!

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பிய ஒரு மனிதனின் கதையை ஒருமுறை இயேசு சொன்னார். அவன் இவ்வாறு ஜெபித்தான்: “நான் மற்ற மனிதர்களைப்போல் இல்லை என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.” அவன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான், ஏனென்றால் அவனது மதம் அவனை உயர்ந்தவனாக மாற்றியிருந்தது என்று அவன் நம்பினான். எவ்வளவு பெரிய தவறு இது! இந்த மனிதன் மன்னிக்கப்படாமலும், நீதிமானாக்கப்படாமலும், எப்படி வந்தானோ அப்படியே தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்று இயேசு சொன்னார். (வேதாகமம், லூக்கா 18:11ஐப் பார்க்கவும்)
பலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் போராடுகிறார்கள், மற்றவர்கள் தன்னை விட “சிறந்தவர்கள்” என்று நினைக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் போட்டோஷாப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட படங்களைப் பத்திரிக்கைகளில் பார்த்துவிட்டு, அதன்பின்னர் தன்னை அப்படத்தோடு ஒப்பிட்டு, தங்களைத் கீழ்ப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களை அழகற்றவர் என்றும், மிகவும் பருமனானவர்கள் என்றும் நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் மற்றவர்களின் வெற்றிகளைப் பார்த்து, “நான் ஏன் அவர்களைப் போல வரமுடியவில்லை?” என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறார்கள்.

மறுபடியும் மெருகூட்டப்பட்ட படங்களில் உள்ள, உனக்குத் தெரியாத ஒரு நபருடன் உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது – உண்மையில் உனக்கு உதவியாக இருக்கிறதா? உண்மையிலேயே சொல், இது உனக்கு உதவுகிறதா அல்லது தீங்கு விளைவிக்கிறதா?

ஆண்டவர் உன்னைப் பார்ப்பது போல் நீ உன்னைப் பார்க்க கற்றுக்கொள்! அவரே உன்னை சிருஷ்டித்தவர்; அவர் நீ வாழ்வதை விரும்புகிறார். விசேஷமான வரங்களை அளித்து உன்னை விசேஷித்த நபராய் விளங்க செய்கிறார். அவருடைய பார்வையில் உனக்கு விலையேறப்பெற்ற மதிப்பு இருக்கிறது. அவர் உன்னை மனதார நேசிக்கிறார். நீ ஒரு ஆபரணமாய் இருக்கிறாய், விலையேறப்பெற்ற முத்தாகவும் மற்றும் பொக்கிஷமாகவும் இருக்கிறாய். அவர் உனக்காக எல்லாவற்றையும் கொடுத்தார், சிலுவையில் அவருடைய சொந்த ஜீவனையும் கூட கொடுத்திருக்கிறார்!

இன்று, அவர், “நான் உன்னை நேசிக்கிறேன்! நீ என் பிள்ளை. நான் உன்னை ஆசீர்வதித்து உனக்கு சகாயம் பண்ணுகிறேன்!” என்று உன்னிடம் சொல்கிறார்.

உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவது உனக்கு உதவாது. ஆனால் கிறிஸ்து இயேசுவில் உனக்கு எல்லாம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதன் மூலமாக உனது வாழ்க்கையை என்றென்றைக்கும் மாற்றிக்கொள்ள முடியும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!