இந்த 5 பழக்கங்கள் உன் வாழ்வையே மாற்றக் கூடும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இந்த 5 பழக்கங்கள் உன் வாழ்வையே மாற்றக் கூடும்!

“மாற்றம் ஏற்படுவதை நீ பார்க்க விரும்புகிறாயா? இந்த 5 விஷயங்களை உன் வாழ்வில் பழக்கப்படுத்திக்கொள்…”

ஒரு நாள், நானும் என் மனைவியும் ஒரு காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதைக் கண்டோம், அவர் தனது முன் கூடையில் ஒரு மரக்கட்டையை வைத்திருந்தார். “அவருக்கு எவ்வளவு புத்திசாலித்தனம்! அவர் தினமும் அப்படிச் செய்தால், ஆண்டு இறுதிக்குள், அவர் 365 மரக்கட்டைகளை வீட்டிற்குக் கொண்டு சென்றிருப்பார்! மேலும் அவர் எந்தப் பணமும் செலவழிக்காமல் ஆண்டு முழுவதும் போதுமான விறகுகளை வைத்திருப்பார்” என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

இந்த சம்பவம், சிறிய பழக்கவழக்கங்களின் ஆற்றலைப் பற்றி கலந்துபேச எங்களை உற்சாகப்படுத்தியது. சில சமயங்களில் நம் வாழ்வில் பெரிய மாற்றம் நிகழும் என்று காத்திருக்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், பெரும்பாலும் சிறிய செயல்கள், மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்யப்படும்போதுதான் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன.

நடைமுறைப்படுத்தக் கூடிய எளிதான சிறிய பழக்கவழக்கங்கள் சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மாற்றத்தை அனுபவிப்பதற்கான உண்மையான திறவுகோல்கள் இவைதான்!

  1. நன்றியறிதலுள்ள நபராய் இரு: நன்றியோடு இருப்பது என்பது ஆண்டவருக்கும் மற்றவர்களுக்கும் நம் நன்றியை வெளிப்படுத்துவதாகும். இது பெரும்பாலும் “நன்றி” என்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது.
  2. ஆண்டவரைத் துதி: நீ இயேசுவின் நாமத்தைத் துதித்து, பரிசுத்த ஆவியானவரை கிரியை செய்ய அனுமதிக்கும்போது, அவருடைய வல்லமை உன் சார்பாக பலமாய் செயல்படும்!
  3. ஆண்டவரோடு பேசு: பரலோகப் பிதாவோடு உரையாட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
  4. மற்றவருக்கு உதவு: நல்ல சமாரியனுக்கு உதவி தேவைப்பட்டதைப்போல, உன் உதவி யாருக்காவது தேவைப்படுகிறதா?
  5. தேவனுக்குச் செவிகொடு: வேதாகமத்தை வாசிப்பதன் மூலமோ, ஒரு நல்ல பிரசங்கத்தைக் கேட்பதன் மூலமோ, அல்லது கர்த்தருக்கு முன்பாக மௌனமாக அமர்ந்திருப்பதன் மூலமோ இதைச் செய்யலாம்… ஒருவர் உன்னிடம் பேசும்போது அதைக் கேட்பது மிகச் சிறந்த வழியாகும்.

நீ நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்! (யோவான் 10:10) இது உனக்குச் சாத்தியம்! பரிசுத்த ஆவியானவரின் உதவியால், உன் வாழ்க்கையில் நீ காண விரும்பும் மாற்றத்தைப் பார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!