இந்த மூடுபனியை நீ நிச்சயம் கடந்து செல்வாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இந்த மூடுபனியை நீ நிச்சயம் கடந்து செல்வாய்!

நீ எப்போதாவது மூடுபனி வழியாகக் கடந்து சென்றிருக்கிறாயா? நீ வாகனம் ஓட்டும்பொழுது, அது பயமுறுத்துவதாக இருக்கும், அது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக அது பல நாட்களுக்கு நீடித்தால், நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். ஒருவேளை நீ வசிக்கும் இடத்தில் இதுபோன்று மூடுபனி இல்லாமல் இருக்கலாம், ஆனால் உலகில் சிறிய தீவுகளாக இருக்கும் பகுதிகளில் மூடுபனி மிக நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.

மூடுபனி ஒரு புகையைப் போலவும், பெரும்பாலும் ஒளிபுகாத திரையைப் போலவும் இருக்கும். உண்மையில், இது நீர்த் துளிகளால் ஆனது. இது பெரும்பாலும், மிக அருகில் சில அடி தூரத்தில் இருப்பவைகளை மங்கலாகத் தெரியச் செய்கிறது. மொத்தத்தில், மூடுபனி என்பது தரையைத் தொடும் மேகம் போன்றது. நீ எப்படி என்று எனக்குத் தெரியாது, ஆனால் வெளியில் பனிமூட்டமாக இருக்கும்போது, வாகனம் ஓட்டுவது என்பது எனக்கு மகிழ்ச்சியாக இராது! தெளிவாகப் பார்ப்பது சிரமமாக இருக்கும் அல்லது உன் கண்ணுக்கு எதுவும் தெரியாதிருக்கும். சூரியன் பிரகாசித்து, வானம் நன்றாக நீல நிறத்தில் காட்சியளிக்கையில், எனக்கு முன்னால் உள்ள சாலையை தெளிவாகப் பார்க்க இயலும்போது வாகனம் ஓட்டுவதையே நான் நிச்சயமாக விரும்புகிறேன்!

இன்று நான் உன்னுடன் பேச விரும்பும் மூடுபனி, வானிலையுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. பாதையை மறைக்கும் இந்தத் திரை, எதிர்காலத்தையும் சேர்த்தே மறைக்கிறது. நாம் அனைவரும் அதை ஒரு கட்டத்தில் உணர்கிறோம். எந்தப் பாதையில் செல்வது அல்லது சாலையின் முடிவில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாதபோதும், நாம் தொலைந்து போகும் போதும், நாம் அதை உணர்கிறோம்.

அப்போதுதான், ஆண்டவருடைய வார்த்தை உண்மையிலேயே நம்மிடம் பேசுகிறது, வேத வார்த்தை கூறுகிறது, “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.” (உபாகமம் 31:8)

ஆண்டவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும், மூடுபனி கடந்து போகிறது – இறுதியில் அது மறைந்துவிடும் என்பதையும் நினைவூட்டும் இன்னும் பல வசனங்கள் இருக்கின்றன.

இங்கு கலைந்துபோவது மூடுபனி மட்டுமே… ஆனால் ஆண்டவரோ, காலங்கள் கடந்து நிற்பவராயும், நித்தியமானவராயும், மேற்கொள்ள இயலாதபடி வல்லமை வாய்ந்தவராகவும் இருக்கிறார். ஆண்டவர் உன்னை விட்டு விலகுவதில்லை. அவர் உறங்குவதில்லை. அவர் மாறுவதில்லை.

அவருடன் சேர்ந்து மூடுபனிபோல இருக்கும் உன் வாழ்வின் பிரச்சனைகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து செல். கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் பற்றிக்கொள். விசுவாசத்துடன் தொடர்ந்து முன்னேறிச் செல். திரைபோன்ற மூடுபனி கலைந்து சூரியன் மீண்டும் உதிப்பதைப் பார்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நன்றி எரிக். இன்று காலையில் நான் எழுந்தபோது, என் கனவுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு மிகவும் குழப்பமாக எழுந்தேன்; ஆனால் உங்களது ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலில் நான் வாசித்த வார்த்தைகளான, “உலகத்தில் இருப்பவனை விட என்னில் இருப்பவர் பெரியவர்” என்ற வார்த்தைகள் என் வாழ்க்கையில் நம்பிக்கையைக் கொண்டுவந்தன, உண்மையில், எனக்குள் கிறிஸ்து இருப்பதால் இப்போது எவ்விதக் குழப்பமும் எனக்கு இல்லை. மிக்க நன்றி.” (ஜான்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!