இந்த மதில் இடிந்து விழும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இந்த மதில் இடிந்து விழும்!

“உன்னால் சாத்தியமில்லாத மதிற்சுவரை ஆண்டவரால் தகர்க்க முடியும் என்பதை இந்தச் சாட்சி உனக்கு நினைவூட்டட்டும்!”

ஏதோ ஒரு கட்டத்தில், நாம் எல்லோரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கிறோம். ஆனால் அப்படியொரு சூழ்நிலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நம்மை வித்தியாசமானவர்களாக மாற்றுகிறது … நாம் யாரிடம் திரும்புகிறோம்?

சகோதரி நிர்மலா அவர்கள் எனக்கு இந்தச் சாட்சியை எழுதினார்கள்: “என் கணவர் ஒரு புதிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தார், இறுதியாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அன்று காலை, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அவரது ஒரு சான்றிதழைக் காணவில்லை என்றும் அதனால் அங்கு வேலை செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிவித்தனர். அவரது விண்ணப்பம் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும், பதிலைப் பெறுவதற்கு பல வாரங்கள் தாமதம் ஆகலாம் என்றும் இதற்கிடையில் அந்தப் பதவிக்கு ஒருவர் அவசரமாகத் தேவைப்படுகிறார் என்றும் அவர்கள் கூறி, வேலை கிடைப்பதற்கான உறுதியை அவருக்குத் தரவில்லை. அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், அவர்​ நம்பிக்கையின்றியும் மனச்சோர்வுடனும் இருந்தார்.”

வாய்ப்பே இல்லை என்பன போன்ற மதிற்சுவர்கள் உனக்கு எதிராக எழும்பும்போது, நிர்மலாவின் கணவரைப் போல உன் இருதயம் வேதனைப்பட்டு, துவண்டுபோகலாம். அப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் நீ எந்தப் பக்கம் திரும்புகிறாய் என்பதுதான் முக்கியம்.

நிர்மலா தொடர்ந்து பேசி: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சலில் ‘ஒரு ஜெபம் எல்லாவற்றையும் மாற்றப் போகிறது’ என்று குறிப்பிட்டிருந்த செய்தி எனக்கு நினைவிற்கு வந்தது. நாங்கள் ஜெபம் செய்தோம். அன்று மதியம் என் கணவருக்கு இன்னொரு தொலைபேசி அழைப்பு வந்தது. மேலாளர் அவரை உடனடியாக வேலைக்கு அமர்த்தவும், அந்தச் சான்றிதழைப் பெற்று ஒப்படைப்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவும் முடிவு செய்திருந்ததைத் தெரிவித்தார். அது நிச்சயம் ஒரு அதிசயம் தான்! அது எங்களுக்குத் தேவையான ஒன்றாக இருந்தது. தேவன் அதைச் செய்தார். அவருடைய நாமம் துதிக்கப்படுவதாக!”

தேவன் அவர்களது ஜெபங்களைக் கேட்டு பதிலளித்தார்! ஆண்டவரின் திட்டங்கள் எப்போதும் மனுஷனுடைய திட்டங்களை விட உயர்ந்தவை. அவருடைய விருப்பம் மேன்மையானது, எப்போதும் அதுவே உயர்ந்தது. அவரது வாக்குத்தத்தம் நிறைவேறத் தாமதமாகிறது அல்லது அவரது திட்டம் நடக்கவில்லை எனத் தோன்றினால், உண்மையான இருதயத்துடன் அவரிடம் திரும்பி, அவருடைய நாமங்களைச் சொல்லிக் கூப்பிடு. அவர் உனக்குச் செவிகொடுத்து உன்னை விடுவிப்பார்!

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” (எரேமியா 33:3)

இன்றே ஆசீர்வதிக்கப்படுவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது நான் தனிமையாக இருப்பதை உணராமல் இருக்க உதவுகிறது. நீங்கள் எழுதும் விதம் – மிகவும் தனிப்பட்ட விதத்தில் என்னோடு பேசுகிறது. நீங்கள் மற்றவர்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன், நான் உண்மையிலேயே சொல்கிறேன். மற்றவர்கள் தங்கள் போராட்டங்களை மேற்கொண்டு தேவனிடத்துக்கு நெருங்கி வருவதைப் பற்றி வாசிக்கையில் எனக்கு நம்பிக்கை உண்டாகிறது. ஆண்டவரிடத்திற்கு நெருங்கி வருவதற்கும் இயேசுவோடு உறவாடுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் வேதாகமத்தை வாசிக்க விரும்பினேன், ஆனால் எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. முகநூல் மூலம் தான் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். இது எனது நாளைத் தொடங்க உதவுகிறது. நான் ஆன்லைனில் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன் மற்றும் ஆன்லைனில் வெவ்வேறு வேத பாட படிப்புத் திட்டங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். எனது வேலையின் மூலம் நான் சென்ற திருச்சபையின் வாயிலாக ஆன்லைன் வேதாகமத்தைக் கண்டுபிடித்தேன். நான் ஜெபிக்கும்போதும் வேதாகமத்தை வாசிக்கும்போதும் எனக்குக் கவலையின்றியும் மனச்சோர்வின்றியும் இருக்கிறேன். என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடமே பதில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும், ஆகவே என்னுடைய எல்லாக் கவலைகளையும் ஆண்டவர் மீது வைத்துவிட முயற்சிக்கிறேன். நீங்கள் செய்யும் ஊழியத்துக்காக மிகவும் நன்றி. இந்த மின்னஞ்சல் மூலமாக நீங்கள் உலகம் முழுவதும் எத்தனை பேரை சந்திக்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! ஆண்டவர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், நீங்கள் செய்யும் வேலையையும் ஆசீர்வதிப்பாராக!” (பிரின்ஸ்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!