இந்தச் சிறியோரில் ஒருவனுக்கு நீ எதைச் செய்கிறாயோ, அதை நீ எனக்கே செய்கிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இந்தச் சிறியோரில் ஒருவனுக்கு நீ எதைச் செய்கிறாயோ, அதை நீ எனக்கே செய்கிறாய்!

நீ எளியவர்களுக்கு ஒரு குவளை தண்ணீரையும், ஒரு துண்டு அப்பத்தையும், ஆடையையும் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் துன்ப நேரத்தில் அவர்களைச் சந்தித்து ஆறுதல்படுத்த வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். பசியாய் இருப்பவர்கள், தாகமாய் இருப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள், நோயுற்று அவதிப்படுபவர்கள், சிறைச்சாலையில் இருப்பவர்கள், மனமுடைந்து இருப்பவர்கள், தனிமையில் இருப்பவர்கள் துன்பத்தில் இருப்பவர்கள் ஆகிய இவர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 25:35‭-‬40)

“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; […]
ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? […]
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”

உன் உறவினர், அண்டை வீட்டார், உனக்கு அறிமுகமான ஒருவர், வீதியில் வசிக்கும் நபர், ஒரு குழந்தை என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தேவன் உன்னைக் கொண்டு இவர்கள் அனைவரையும் தொட விரும்புகிறார். இவர்களில் மிகவும் சிறிய நபரைக் கூட நேசிக்கக் கூடும்படிக்கு, தேவன் தமது இருதயத்தை உனக்குக் கொடுத்திருக்கிறார். இவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களை நீ நேசித்து, கிறிஸ்து இயேசுவின் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்திக்காட்டு.

“என் வாழ்வில் தற்செயல் என்ற சொல்லிற்கு இடமே கிடையாது. நம் தேவன் மிகப் பெரியவர்….காலைப் பொழுதில் எப்போதும் உங்கள் கடிதத்தை வாசிக்க விரைந்தோடி வருவேன். நான் புற்றுநோய் தடுப்பு மையத்தில் பணிபுரிகிறேன். அங்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் சந்திக்க நேரிடும். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ எனக்கு சுவாசிக்கும் காற்று போன்றதும், தாகம் தீர்க்கும் தண்ணீர் போன்றதுமாய் இருக்கிறது. அங்கு நோயினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் வேத வசனங்களைக் கூறுவேன். குறுஞ்செய்திகளாகவும் அவர்களது கைபேசிக்கு வசனங்களை அனுப்புவேன். என் வீட்டிற்கு வரும் அனைவருக்கும் வாசனங்களை எடுத்துச் சொல்லுவேன். இதன் மூலம் தாகமாய் இருந்த பலரும் தேவ வார்த்தையினால் தாகம் தீர்க்கப்பட்டனர். கண்ணீரோடு வந்த பலரும், இயேசுவின் மேல் நம்பிக்கையோடு, அவரே எங்களைக் குணமாக்குகிறவர் என்று விசுவாசித்து, இயேசுவோடு சேர்ந்து தங்கள் சிலுவைகளை சுமந்துகொண்டு சிரித்த முகத்துடன் திரும்பிச் செல்வார்கள். இயேசுவை அவர்கள் எல்லோரும் முழு மனதுடன் நம்புகிறார்கள்! தேவனுக்கே மகிமை!”

தேவனுடைய அன்பை வெளிப்படுத்திய சம்பவத்தை இந்த வல்லமையுள்ள சாட்சி மூலமாகப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கீதா. தொடர்ந்து தேவனுடைய அன்பை செயல்படுத்திக்காட்டுங்கள் நன்றி!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!