இதோ, உன் வாழ்வின் ஒவ்வொரு நாளுக்கும் உனக்கான ஒரு வாக்குத்தத்தம்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› இதோ, உன் வாழ்வின் ஒவ்வொரு நாளுக்கும் உனக்கான ஒரு வாக்குத்தத்தம்…

“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” என்று தாவீது ராஜா வேதாகமத்தில் கூறியிருக்கிறார் (வேதாகமத்தில் சங்கீதம் 23:6ஐப் பார்க்கவும்)

நாம் நன்றாக அறிந்திருக்கும் இந்த வசனம் நமக்குக் கிடைக்கும் நன்மை மற்றும் கிருபையைப் பற்றி பேசுகிறது!
உனக்கும் உன் வாழ்க்கைக்கும் இயேசு நன்மையை விரும்புகிறார்… அவர் உன்னை ஆசீர்வதிக்கவும், நிரப்பவும், உன்னை சந்தோஷப்படுத்தவும் விரும்புகிறார்.

உன் மூலமாகவும் உன் வாழ்க்கை மூலமாகவும் இயேசு என்ன செய்ய விரும்புகிறார் என்பதுதான் இரக்கமாகும்… உன் மூலமாக அவருடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும், மன்னிக்கவும், அவருடைய ஜீவனையும் சமாதானத்தையும் பகிரவும் அவர் உனக்கு உதவ விரும்புகிறார்…

ஆம், நன்மையும் கிருபையும் உன் வாழ்நாள் முழுவதும் உன்னைத் தொடரும்! மேலும் இது எங்கே நடக்கிறது? தேவனுடைய வீட்டில் நடக்கிறது! தாவீது தேவனுடைய வீட்டில் இருக்க விரும்பினான். அவன் கர்த்தருடைய பிரசன்னத்தை விரும்பினான்.

இன்று, தேவனுடைய பிரசன்னத்தை அணுக நீ பரிசுத்தமான இடத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. சிலுவையில் இயேசு செய்த தியாகமானது நாம் அவருடைய பிரசன்னத்தை நிரந்தரமாகவும் எல்லா இடத்திலும் அணுக நமக்கு உதவியது!

நீ தேவனுடைய வீடாய் இருக்கிறாய். உன் சரீரமானது உன்னில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்கிறது. உன் நாட்களின் முடிவுவரை, நித்தியத்தை அடையும்வரை தாவீது செய்ததுபோல் அவருடைய பிரசன்னத்தை உனக்குள் உணர்ந்துகொண்டிரு!

என்னுடன் சேர்ந்து ஜெபி… “என் கர்த்தாவே, உமது சமுகத்தில் எனக்குக் கிடைக்கிற நன்மைக்காகவும் இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி. உமக்காகவும் நீர் எனக்காக செய்பவைகளுக்காகவும் நான் உமக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக / நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன்! நன்மையும் கிருபையும் என் வாழ்நாள் முழுவதும் என்னைத் தொடரும் என்று நான் நம்புகிறேன். ஆமென்!”

சாட்சி: “இந்த மின்னஞ்சல்கள் மூலம் கர்த்தர் என்னிடம் நிறையப் பேசியிருக்கிறார். நான் பலமுள்ளவனாகவும் பயமில்லாதவனாகவும் இருக்க அவை உதவுகின்றன. இந்த மின்னஞ்சல்களை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்ட நபர்களுக்காக நான் தேவனைத் துதிக்கிறேன். தேவனுடைய அன்பு மற்றும் இரக்கத்திற்காக அவரைத் துதிக்கிறேன்!!! சகோதரர் எரிக், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!” (டேவிட்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!