இது திருப்புமுனைக்கான நேரம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› இது திருப்புமுனைக்கான நேரம்

ஆண்டவருடைய படைப்பை உற்றுநோக்கி கவனிப்பது எனக்கு சலிக்காத ஒன்று. ஆண்டவருடைய படைப்பு மிகவும் வியக்கத்தக்கது, மிகவும் அசாதாரணமானது, வண்ணமும் அழகும் நிறைந்தது. குறிப்பாக பனித்துளி மலர்கள் எனும் வெள்ளை நிற மலர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்… அவை அற்புதமானவை!

சிறிது கற்பனை செய்து பார்… ஒரு மிகவும் குளிர்ந்த நாட்டில் குளிர்காலம் முடிவடைகிற நேரம். மரங்கள் இன்னும் இலைகள் இன்றி வெறுமையாக உள்ளன, பூமி இன்னும் அதன் வெள்ளை, குளிர்கால ஆடையை மாற்றவில்லை… ஒரு மெல்லிய பனிப் போர்வை தரையை மூடியிருக்கிறது. நேரம் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது, காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், எதிர்பாராத விதமாக, புது வாழ்வு உயிர்த்தெழுகிறது, உயிர்ப்பு வெற்றி பெறுகிறது! சிறிய முளைகள் பனியின் குறுக்கே ஒரு பாதையை தெளிவுபடுத்துகிறது, மேலும் மலர்களின் சிறிய வெள்ளைத் மொட்டுக்கள் அவற்றின் மூக்கின் நுனிகளையும் பின்னர் அவற்றின் இலைகளையும் காட்டுகின்றன.

இது உன் வாழ்க்கைக்கும் பொருந்தும்! உன் வாழ்நாளில், நீ வெவ்வேறு பருவங்களைக் கடந்து செல்கிறாய்… சில பருவங்கள் மற்றதை விட கடும் குளிராக இருக்கும். சில நேரங்களில் நீ “இடைநிறுத்தத்தில்” (pause)ல் வைக்கப்பட்டுள்ளாய் என்று உனக்கு தோன்றலாம், இரண்டு நிலைகள் அல்லது பருவங்களுக்கு இடையில் இருப்பதுபோல… இந்த திட்டம் வெற்றிகரமான முடிவுக்கு வரப் போகிறதா? இந்த கஷ்டம் எப்போதாவது தீருமா? என்ற சிந்தனைகளோடு.

ஆம் மற்றும் ஆம்! ஏனென்றால் உயிர்ப்பு வெற்றிபெற்றது, மரணத்தின் சக்தியை உயிர்ப்பு விழுங்கியது! உயிர்ப்பு என்பது ஒரு சொல், ஒரு கருத்து அல்லது ஒரு நிலையை விட மேலானது. உயிர்ப்பு என்பது ஒரு நபர்: இயேசு கிறிஸ்து, ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் இறைவன்!

நீ இதை உணர்கிறாயா? அவரது உயிர் உன்னை மூடி, உன் இதயம், ஆன்மா மற்றும் எண்ணங்களை ஊடுருவி வருகிறது. இது உன் கனவுகளின் களத்தில், நீ வசிக்கும் இடத்தில் கிருபை, வல்லமை மற்றும் கம்பீரத்துடன் பாய்கிறது.

உயிர்ப்பு வெடித்தெழுகிறது, உயிர்ப்பு வெற்றி பெறுகிறது! நீ இயேசுவுடன் வெற்றி பெறுகிறாய்! நீ பனி படர்ந்த நிலத்தைக் கடந்து செல்கிறாய்; நீ சந்தேகம் மற்றும் பயத்தின் திரைகளை துளைத்து செல்கிறாய். நீ தடைகளை உடைத்து செல்கிறாய். ஆண்டவர் உன்னை உயர்த்துகிறார் – உனக்கு வெற்றியைத் தருபவர் ஆண்டவரே!

இது திருப்புமுனையின் நேரம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!