இது இயற்கைக்கு அப்பாற்பட்ட குணமாகுதலின் நேரம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இது இயற்கைக்கு அப்பாற்பட்ட குணமாகுதலின் நேரம்!

நீ தேடிக்கொண்டிருக்கும் அற்புதத்தை அனுபவிக்க, “விசுவாசம் எனும் பவர் சுவிட்சை” இயக்குமாறு கடந்த சில நாட்களில் நான் உன்னை ஊக்குவித்தேன். விலைக்கிரயம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அதைச் செலுத்தி, அதிசயங்களின் ஆண்டவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டு வலுவாக நில்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்ததைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய சுசி அவர்களின் சாட்சி என்னை மிகவும் தொட்டது.

“எனக்குப் புற்றுநோய் முத்தி, அது இறுதிக் கட்டத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன. ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்குமாறு டாக்டர் என்னிடம் சொன்னார், ஏனென்றால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் உங்களது ஜெப உதவியை நாடினேன், அதோடு கூட என்னைக் காப்பாற்றும்படி நான் சர்வவல்லமையுள்ள தேவனை அழைத்தேன், அவர் எனக்கு தயவாய் பதிலளித்தார். இப்போது வியாதி குறித்த அறிக்கைகள் என்னிடம் உள்ளன, புற்றுநோய் இருந்ததற்கான எந்தத் தடயமும் அதில் இல்லை. அற்புதங்களைச் செய்யும் ஆண்டவருக்கு முன்பாக நான் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போய் நிற்கிறேன். ஆம், அவர் உண்மையுள்ளவர், ஜீவிக்கிறவர், அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். நான் மிகவும் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்கிறேன்.”

சுசி அவர்கள் விசுவாச ஜெபத்தின் மூலம் ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதைத் தேர்வு செய்தபடியால் அவர் பதிலளித்தார்! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் ஒருபோதும் மாறுவதில்லை!

ஆண்டவர் இப்படித்தான் செயல்படுவார். நீ அவர் மீது நம்பிக்கை வைப்பதால், அவர் செயல்படுகிறார்; அவர் உனக்குப் பதிலளிக்கிறார். அவர் உன் விசுவாசத்தைக் கனம்பண்ணுகிறார்!

அற்புதங்களின் காலம் முடிந்துவிடவில்லை. தெய்வீக குணமளிக்கும் காலம் கடந்துபோய்விடவில்லை. நம் ஆண்டவர் இன்றும் அசைவாடி கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் உன் வாழ்க்கையின் மீதும் அசைவாடி உன் தேவைகளைச் சந்திக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!

நீ இன்னும் ஒரு படி மேலே செல்ல விரும்பினால், “அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்” என்ற இந்தப் பாடலின் மூலம் உன் வாழ்க்கையில் தேவன் எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்பதை அறிக்கையிட உன்னை அழைக்கிறேன். https://youtu.be/O6ZnhBXOus4?si=qvYj3_geFEEfSGRe

இயேசுவின் நாமத்தில் நீ ஆசீர்வதிக்கப்பட்டு குணமடைவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் பெயர் ரெபேக்கா, நான் உங்களுடன் ஒரு காரியத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு என் மூளையில் இரத்த தமனி வீக்க பிரச்சனை இருந்தது. நான் அதிலிருந்து குணமடைந்துவிட்டேன், ஆனாலும் எனது உடல்நலத்தையும் எனது எதிர்காலத்தையும் குறித்து தொடர்ந்து நான் கவலையில் இருந்து வந்தேன். கடந்த காலத்தில், எனது குடும்பத்தையும் எனது வீட்டையும் நான் கவனித்து வந்ததைப்போல, என்னால் கவனிக்க முடியாமல் போகலாம் என்று நான் கவலைப்பட்டேன். இந்த வியாதிக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்று தொடர்ந்து யோசித்துப் பார்த்தேன், மேலும் எனது வாழ்க்கை முறையும் எனது எதிர்காலமும் பறிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துவந்தது. அது என்னை உயர்த்தியுள்ளது. நான் பெற்று வந்த செய்திகள் எனக்காகவும் என் சூழ்நிலைக்காகவும் எழுதப்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஆண்டவர் எனக்காக ஒரு திட்டம் வைத்திருந்ததையும், என்னைக் காணும்படிக்கு, அவர் மீதும் அவரது அன்பின் மீதும் நான் விசுவாசம் வைக்க முடியும் என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன். இந்தச் செய்திகளை தினமும் வாசிப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் இனி கடந்த கால நினைவுகளில் வாழப்போவதில்லை, எனது எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்!” (ரெபேக்கா, ராஞ்சி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!