“இது அநீதி” என்று தெரியும்போது என்ன செய்வது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› “இது அநீதி” என்று தெரியும்போது என்ன செய்வது?

எப்போதாகிலும், “இது நியாயமில்லை. இது என் தவறு அல்ல, ஆனால் நான் விலைக்கிரயம் செலுத்துகிறேன்! அவன்/அவள் தான் இக்குழப்பத்திற்கெல்லாம் காரணம், ஆனால் இறுதியில் காயமடைந்தது என்னவோ நான்தான்…” என்று உன் பரம பிதாவிடம் சொல்லி அதிர்ச்சியடைந்ததுண்டா?

ஏதோவொரு சந்தர்ப்பத்தில், அநீதி இழைக்கப்படுதல், அநீதி இழைக்கப்பட்டது போன்ற உணர்வு ஆகியவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் இதைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த உணர்வு நமக்குள் வளரும்போது, அது நாளடைவில் வெறுப்பையும், கசப்பையும், சில சமயங்களில் பழிவாங்குவதற்கான விருப்பத்தையும் பிறப்பிக்கிறது.

ஏனென்றால் நமக்குள் ஏற்பட்ட காயம் பெரிதாக இருக்கிறது, ஏன் இப்படி நடந்தது என்று புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு தவறும் செய்யவில்லை.

அதனால்தான், இந்த உணர்வு நமக்குள் ஏற்பட்டவுடன், அவ்வுணர்வைக் கட்டுப்படுத்தி, கூடுமானவரை துரிதமாக ஆண்டவரின் கரங்களில் விட்டுவிடுவதும், மீண்டும் அதற்கு இடங்கொடாமல் இருப்பதும் முக்கியம். எபேசியர் 4:31-ல் வேதாகமம் நமக்குச் சொல்கிறபடி, நாம் அவற்றை நீக்கிப்போட வேண்டும். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.”

நானும் கூட எனக்கு அநீதி இழைக்கப்பட்ட உணர்வை பலமுறை அனுபவித்திருக்கிறேன். பழிவாங்கும் விருப்பத்திலிருந்து என்னை விலகியிருக்கச் செய்தது எதுவென்றால், தேவனுடைய கிருபையினால் சிலுவையின் கீழ் பழிவாங்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துவிட்டு, அவற்றை மீண்டும் தலைதூக்க விடாமல், மன்னிப்பு என்னிலிருந்து வழிந்தோடச் செய்ய நான் இடங்கொடுத்ததுதான். இல்லையெனில், இந்த அநீதி இழைக்கப்பட்ட உணர்வு வளர்ந்து, என் உள்ளார்ந்த மனதின் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அழித்திருக்கும். ஒவ்வொரு நாளும் உனக்கு நேர்மறையான ஊக்கமளிக்கும் தேவ செய்தியை என்னால் எழுதியிருக்க முடியாது!

எனவே ஒவ்வொரு முறையும், “இது ஒரு அநீதி!” என்று கண்டால் அதை ஆண்டவரிடத்தில் ஜெபத்தில் வைத்துவிடு. உன் மனதில் உள்ளதை அப்படியே அவரிடம் சொல்லிவிடு. நொறுங்குண்ட இருதயத்தோடு உள்ளவர்களுக்கு அருகில் ஆண்டவர் இருக்கிறார். இதோ உனக்கான ஆண்டவரின் ஒரு வாக்குத்தத்தம்…

“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 34:18ஐப் பார்க்கவும்)

நான் என் முழுமனதோடு உன்னோடு கூட இருக்கிறேன். உன் கஷ்டங்கள் கூட எப்படி உனக்கு ஆசீர்வாதமாக மாறும் என்பதை நாளை உன்னுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!