ஆம், நீ ஜெயம் பெறுவாய்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” (வேதாகமத்தில் யோசுவா 1:9ஐப் பார்க்கவும்)
ஒருவேளை இப்போது நீ உன் வாழ்க்கையில் ஒரு குறுக்கு வழிச் சாலையில் எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டு இருப்பதைப்போல உணரலாம்… உன் அருகில் வந்திருக்கிற இந்தப் புதிய சவால், மற்றும் இந்தப் புதிய அனுபவம் எது?
- புதிய வேலையா?
- குழந்தை பிறப்பா?
- நடக்க இருக்கும் திருமணமா?
- ஒரு திருப்பமா?
- வேறு ஏதாவதா?
புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது, ஒருவித கவலையோ அல்லது பயமோ கூட ஏற்படுவது இயல்பானதும் மனித சுபாவமுமாகும். மாற்றம் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, நேர்மறை மாற்றம் கூட எப்போதும் நமக்கு அசௌகரியத்தை உருவாக்குகிறது.
வீரமுள்ள பராக்கிரமசாலியே, எழும்பு! வீரமுள்ள பராக்கிரமசாலியாகிய பெண்ணே எழும்பு! கர்த்தருடைய நன்மை குறைந்துபோகவில்லை. தேவன் உன்னைத் தாங்கி நடத்துகிறார். அவர் உன் சத்துவமும் உனக்கு ஆதரவு அளிப்பவருமாய் இருக்கிறார், புயல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் காலங்களில் உனக்கு உதவுபவராய் இருக்கிறார்!
நீ இந்த வனாந்தரப் பகுதியின் முடிவுக்கு வரப் போகிறாய், இந்தப் பருவத்தைக் கடந்துசெல்லப் போகிறாய், இந்தத் திட்டத்தில் வெற்றி பெறுவாய், அந்த வேலையைப் பெற்றுக்கொள்வாய்…
பரலோக சேனையின் தேவனாகிய கர்த்தர் உன்னுடன் இருப்பதால் நீ வெற்றியடைவாய்! அவர் உனக்காக இருக்கிறார். அவர் உன் அருகில் இருக்கிறார்.
நீ போகும் இடமெல்லாம் அவர் உன்னுடன் இருக்கிறார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது!
அவர் மீது நம்பிக்கை வைப்பதைத் தெரிந்துகொள். அவரைப் பின்பற்றுவதைத் தெரிந்துகொள். அவருடைய வல்லமை வாய்ந்த கரம் உன்னைப் பிடித்து, உன்னை வேறொரு நிலைக்கு, புதிய எல்லைகளை நோக்கிக் அழைத்துச் செல்கிறது.
நீ பெரிய காரியங்களைச் செய்யும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறாய், தேவனுடைய ஆவியால், நீ வெற்றி பெறுவாய்… ஆம், நீ வெற்றி பெறுவாய்!
என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “ஆம், கர்த்தாவே, நான் வெற்றி பெறுவேன் … நீர் என்னுடன் இருக்கிறீர்! நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னை நீர் அழைத்தீரோ, அவை அனைத்தையும் நான் செய்வதைத் தெரிந்துகொள்கிறேன். என்னை ஒரு புதிய நிலைக்குக் கொண்டுவந்து, புதிய எல்லைகளை நோக்கி வழிநடத்தி வந்ததற்கு நன்றி! உமது நாமத்தில் நான் எழும்புகிறேன்! ஆமென்.”
