ஆண்டவர் மீது எப்போதும் விசுவாசம் வைத்திரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் மீது எப்போதும் விசுவாசம் வைத்திரு

உன் மன வலிமை இந்த நேரத்தில் சற்றுக் குறைவாக இருக்குமானால், ஆண்டவர் மீது உன் விசுவாசத்தை வைக்கும்படி இன்று உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

வேதாகமத்தில் இயேசு சொல்வதைப் பார்… “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மாற்கு 11:22-23)

சில சமயங்களில் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகள் அல்லது நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள், நிலைமை மோசமாக இருக்கிறது என்றோ அல்லது நிலைமை மோசமாகப்போகிறது என்றோ நம்மை நம்ப வைக்கலாம். சில நேரங்களில், நம்மையும் அறியாமலேயே, நம் எண்ணங்கள் தாக்கப்பட்டு, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மனச்சோர்வடைய ஆரம்பிக்கிறோம்.

ஆனால், நம் சிந்தனையிலும் நம் வாழ்விலும் நாம் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்தையும், விசுவாசத்தினால் நாம் பெற்றுக்கொண்டோம் என்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். ஆம், சிறந்ததை எதிர்பார்த்து இருக்க நம்மிடம் பல நல்ல காரணங்கள் உள்ளன!

இன்று, மீண்டும் ஒருமுறை, உன் பார்வையிலிருந்து சூரியனைத் தடுக்கும் இந்த மலையை இயேசுவின் நாமத்தால் பெயர்த்து கடலில் தூக்கி எறியலாம்! என் நண்பனே/தோழியே, இந்த வெற்றியைத் தவற விடாதே!

மலையைக் கடலில் எறிந்துவிட்டு சூரியனை மீண்டும் உன் மீது பிரகாசிக்கச் செய்ய ஆண்டவரால் கூடுமென்றால், மேகமூட்டம் போல இருக்கும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்த இடத்தில் நீ ஏன் இருக்க வேண்டும்?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!