ஆண்டவர் தீமையிலிருந்து நன்மையை வெளியே கொண்டுவரப்போகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் தீமையிலிருந்து நன்மையை வெளியே கொண்டுவரப்போகிறார்!

உங்களுக்கு யோசேப்புவைக் குறித்து ஞாபகம் இருக்கிறதா? அவனது சகோதரர்கள் அவனை “சொப்பனக்காரன்” என்று கேலி செய்தனர். வாய்ப்புக் கிடைத்தபோது, அவனைக் கொல்லவும் நினைத்தார்கள்! உண்மையில், யோசேப்பு ஒரு “சொப்பனக்காரன்” அல்ல. ஆண்டவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவன் முன்கூட்டியே பார்த்தான்! அவனது சகோதரர்கள் அதைப் பார்க்கவில்லை. அக்காலத்தின் மிகப்பெரிய அரசியல் அதிகாரத்துடன் எகிப்தின் வருங்கால பிரதம மந்திரி பதவி யோசேப்புக்காகக் காத்திருக்கும் அசாதாரண இலக்கை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவர்களையும் அவர்களுடைய முழு குடும்பத்தையும் காப்பாற்ற ஆண்டவர் யோசேப்பைப் பயன்படுத்துகிறார் பாருங்கள்!

“யோசேப்பு” என்றால் “யெகோவா அதிகம் தருபவராய் இருப்பாராக/பெருகப்பண்ணுபவராய் இருப்பாராக” என்று பொருள். ஆண்டவர் உனக்கு ஒரு எண்ணம், யோசனை, தரிசனம், கனவு அல்லது சவால் மூலம் ஒரு பெருக்கத்தைக் கொடுக்கும்போது, உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். அவர்களின் புரிந்துகொள்ளாத தன்மை நமக்குள் வேரூன்றலாம், ஆனால், அதற்குப் பிறகு, அதை எப்படிச் சமாளிப்பது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்! சில சமயங்களில், இந்தப் புரிதல் இல்லாமையால், உண்மையான நிராகரிப்பு உணர்வு வரக் கூடும்.

யோசேப்பு‌ நிராகரிக்கப்பட்டான், ஒரு குழியில் வீசப்பட்டான், அவனுடைய சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டான். பின்னர், அவன் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தான், எல்லோராலும் மறக்கப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனை மறக்கவில்லை! உண்மையில், பல ஜீவன்களைக் காப்பாற்ற அவனைப் பயன்படுத்துவது ஆண்டவரின் திட்டமாக இருந்தது. யோசேப்பு தனது சொந்தத் திட்டத்தை விட மிகப் பெரிய திட்டத்தை நிறைவேற்றவும், இறுதியில் தனது சகோதரர்களின் உயிரைக் காப்பாற்றவும் இந்தச் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது!

இருப்பினும், நிராகரிப்பு கடினமானது! இது எந்த வகையிலும் எளிதானது அல்ல. நான் ஒரு இளம் போதகராக இருந்தபோது அதை அனுபவித்தேன், தலைசிறந்த கிறிஸ்தவனாக சில வருடங்கள் மட்டுமே காணப்பட்டேன். கிறிஸ்துவ சகோதரர்கள் மற்றும் போதகர்களாகிய சக ஊழியர்கள் சிலரின் நிராகரிப்புகளை சில சமயங்களில் எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்தச் சோதனைகளின் மூலம், நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், குறிப்பாக மன்னிப்பு மற்றும் நீடியபொறுமை ஆகியவைகளைக் கற்றுக்கொண்டேன்!

நீ நிராகரிக்கப்பட்டிருக்கிறாயா? அல்லது மற்றவர்கள் உன்னைப் புரிந்து கொள்ளவில்லையா? நீ என்ன செய்தாய்? உன் விதியில் உன்னை மேலே கொண்டுவருவதற்கான தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்பதை அறிவது முக்கியம். உன் வாழ்வின் மூலம், உன்னை நிராகரித்தவர்கள் கூட ஆசீர்வதிக்கப்பட்டு இரட்சிக்கப்படுவதற்காக, அற்புதமான விஷயங்களை, உனக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்ய அவர் உனது வாழ்க்கையைப் பயன்படுத்த விரும்புகிறார்! அதன் மூலம், நீ மற்றவர்களுக்கு உண்மையான அற்புதமாக மாறலாம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!