ஆண்டவர் தமது முடிவை சொல்லிவிடவில்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் தமது முடிவை சொல்லிவிடவில்லை!

இந்த நாளிலும், கிறிஸ்து இன்றும் ஜீவனோடு இருக்கிறார், செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை நம் மனதுக்கு நினைவூட்டுவதை விட சிறந்தது எது! நமது இரட்சகர் கல்லறையில் இருந்தபோது, நமது நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டதாக நமக்குத் தோன்றிய வேளையில், ​​தேவ ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார்… அவர் அப்போதும் தமது முடிவைச் சொல்லிவிடவில்லை!

மனமடிவை மாற்றி மகிழ்ச்சியான வாழ்வையும், துக்கத்தை மாற்றி மிகுந்த ஆறுதலையும், நிராகரிப்பை மாற்றி சமாதானத்தையும் கொடுத்து… நம் இருண்ட காலங்களில் எவ்வாறு தேவன் நம் சார்பாக செயல்படுகிறார் என்பதையும், தேவனுடைய பிரசன்னம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் வெளிப்படுத்தும் இரண்டு சாட்சிகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  1. “என் வாழ்க்கையை மாற்ற இந்த மின்னஞ்சல்களை தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை என்னால் விவரித்து முடிக்க முடியாது… சமீபத்தில், தேவனுடன் என்றென்றும் இருக்கும்படி சென்ற ஒரு கிறிஸ்தவ மனுஷனின் விதவைதான் நான்… எங்களுக்குத் திருமணமாகி இதுவரை மொத்தம் 39 ஆண்டுகளாகிறது!! நான் வாழ்வின் பெரும் சிக்கல்களை சந்தித்திருக்கிறேன்… ஆனால் தேவன் அற்புதமானவர்… உங்களது செய்திகள் மூலமாகவும் மற்றும் எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்ளும் சர்வதேச குழுவின் மூலமாகவும், நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்… அவருடைய மரணத்திற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்… கடந்த சில நாட்களாக, என்னை ஊக்குவிக்கும்படி தேவன் உங்கள் ஊழியத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை என்னால் விவரிக்க வார்த்தைகள் இல்லை… 56வது வயதில் திடீரென்று தனிமையில் இருப்பது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது… இந்த மின்னஞ்சல்கள் எனக்கு தேவனே பேசும் செய்திகளைப் போல… அதாவது, “கவலைப்படாதே, நான் உன்னை விட்டு விலகவில்லை… உன் சூழ்நிலை எனக்குப் புரிகிறது!!” என்று சொல்வதைப்போல இருக்கிறது. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய முடிந்தமைக்கு மீண்டும் நன்றி.” மேகலா.
  2. “நான் எப்போதும் ஒரு சிறிய கருப்பு ஆடாக இருந்து வந்திருக்கிறேன். என் அம்மா என்னை விரும்பவில்லை, இந்த நிராகரிப்பு என் வாழ்க்கையில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தியது. என் கணவருடனும் மற்றவர்களுடனுமான எனது உறவில் நான் பிரச்சினைகளை சந்தித்தேன். நான் பதிலுக்கு அன்பைத் திரும்பப் பெறும்படிக்கு, எப்பொழுதுமே என்னால் முடிந்ததை மட்டுமே செய்து, மற்றவர்களை நேசிக்க முயற்சித்தேன். எனக்கு 68 வயதாகிறது, நான் தேவனை நேசிக்கிறேன், நான் 12 வயதாக இருந்தபோதிலிருந்தே அவருக்குச் சொந்தமானவளாய் இருந்து வந்திருக்கிறேன், ஆனால் தேவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் நான் நல்ல விதத்தில் நடந்துகொள்ளவில்லை என்றும், நான் தகுதியானவளாய் இருக்கவில்லை என்றும் நினைத்தேன். அது பொய் என்பதை ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த தினசரி தியானத்தில் மீண்டும் மீண்டும் வாசிக்க முடிந்தது. தேவன் என்னை சிருஷ்டித்தார், என்னை விரும்பினார், நான் இருக்கிற வண்ணமே அவர் என்னை நேசிக்கிறார். இந்த வார்த்தைகளுக்காக நன்றி.” டெனிஸ்.


மேகலா, டெனிஸ்… உங்கள் வியக்கத்தக்க ஊக்கமளிக்கும் சாட்சிகளுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!
கிறிஸ்து இன்று உன் வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். உயிர்த்தெழுந்த அதிசயத்தின் மூலம் உன்னையும் மாற்றுவதற்கு அவர் உனக்கு அருகிலேயே இருக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!