ஆண்டவர் தமது திட்டத்தை உனக்கு வெளிப்படுத்த விரும்புகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் தமது திட்டத்தை உனக்கு வெளிப்படுத்த விரும்புகிறார்!

இங்கே நமது பூமிக்குரிய வாழ்க்கைப் பயணத்தின்போது,​ நாம் கேட்பது, பார்ப்பது அல்லது உணர்வது என அனைத்திலும் நாம் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம். இயேசு தம்முடைய ஆவியை நமக்கு விட்டுச் சென்றதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

“எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.” (வேதாகமத்தில் I கொரிந்தியர் 2:9-10ஐப் பார்க்கவும்)

நம் கண்களால் பார்க்க முடியாதவைகளும், நம் காதுகளால் கேட்க முடியாதவைகளும் மற்றும் நம் இருதயத்தால் புரிந்துகொள்ள முடியாதவைகளுமான விஷயங்கள் உள்ளன. இருப்பினும், ஆண்டவர் தம்மீது அன்புகூருகிறவர்களுக்கு இந்த மறைந்திருக்கும் விஷயங்களைக் காட்ட ஏற்கனவே ஆயத்தம் செய்து வைத்துள்ளார். நீ கர்த்தரை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன்.

உனக்காக நல்ல விஷயங்கள் பல தயாராக உள்ளன! எல்லாவற்றையும் அறிந்து, ஆராய்ந்து பார்க்கிற அவருடைய ஆவியின் மூலம் தேவனுடைய ஆழமான விஷயங்களை உனக்கு வெளிப்படுத்துவதே அவருடைய சித்தம். உனக்கான தற்போதைய மற்றும் வருங்கால வெளிப்பாடுகளைப் பெறாமல் உன் வாழ்க்கையில் நீ ஏன் தொடர்ந்து முன் செல்ல வேண்டும்?

இன்று அவருடைய ஆவி உன்னைத் தொடும்படி நான் ஜெபிக்கிறேன், மேலும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “பிதாவே, உம்மை நேசிப்பவர்களுக்காக நீர் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறவைகளுக்காக உமக்கு நன்றி. நான் உம்மை முழு மனதுடன் நேசிக்கிறேன். மேலும், வெளிப்பாட்டின் ஆவியானவர், முன்னரே ஆயத்தமாக்கப்பட்ட இந்தக் காரியங்களை எனக்குக் காண்பிக்கவும் வெளிப்படுத்தவும் வேண்டும் என்று இன்று ஜெபிக்கிறேன். நான் அவற்றைப் பெற விரும்புகிறேன், ஏனென்றால் என் வாழ்க்கை சிறந்துவிளங்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் திருமணம் செய்துகொள்ளாததால் தனியாக வாழ்ந்து வருகிறேன். அதனால் சில நேரங்களில் நான் தனிமையாக உணர்வதுண்டு. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிப்பது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் நான் தனியாக இல்லை, இயேசு என்னுடன் இருக்கிறார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது. நன்றி! ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ நான் ஒவ்வொரு நாளும் தவறாமல் பெற விரும்பும் ஒரு மின்னஞ்சலாகும் – இது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது!” (பால், திருப்பத்தூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!