ஆண்டவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்வார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்வார்

“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்…” (பிரசங்கி 3:11)

நம் வாழ்வில் மன அழுத்தத்தை (stress)ஐ உண்டாக்குவது பெரும்பாலும் நமது பொறுமையின்மையே என்பதை நீ எப்போதாவது கவனித்திருக்கிறாயா? நேரம் இன்னும் வரவில்லை, ஆனால் அது ஏற்கனவே இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்!

ஆண்டவர் சில சமயங்களில் தாமதமாக, மிகத் தாமதமாகப் பதிலளிக்கிறார், ஆனால் ஒருபோதும் தாமதமாக மாட்டார். அவர் ஒருபோதும் தாமதிக்க மாட்டார். அவர் உன்னிடத்தில் வர ஒருபோதும் தாமதிக்க மாட்டார்.

உன் ஆசீர்வாதம் திட்டமிடப்பட்டுள்ளது. அது அதன் வழியில் உள்ளது. வாக்குறுதி தாமதமானால், அதற்காக காத்திரு; ஏனென்றால் அது நிச்சயமாக வரும், அது தாமதிக்காது. (வேதாகமம், ஆபகூக் 2:3 ஐப் பார்க்கவும்)

என்னுடன் அறிக்கையிடு: “அப்பா, என் வாழ்வில் சகலத்தையும் அதினதின் காலத்திலே நீர் நேர்த்தியாகச் செய்வீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உம்மை முற்றிலும் நம்புகிறேன். எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். என் ஆசீர்வாதம் அதன் வழியில் உள்ளது. வரப்போகிறது… இது நிச்சயம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

அவருடைய சமாதானம் இப்போது உன் இதயத்தை நிரப்பட்டும். அவர் உருவாக்கினார், அவர் உருவாக்குகிறார், அவர் சகலத்தையும் அழகாக செய்வார்…அதினதின் காலத்தில்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!