ஆண்டவர் கேக் செய்வாரா? 🥧
முகப்பு ›› அற்புதங்கள் ››
நாம் ஆரோக்கியமாக சாப்பிட முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் ஜெனியாகிய எனக்கு இனிப்புப் பலகாரங்கள் மீது அதிக நாட்டம் உண்டு. மேலும் இனிப்பு உண்பதற்கான ஆசைகள் அடிக்கடி என்னை மேற்கொண்டுவிடுகின்றன! 🙈 அதனால்தான் நான் இனிப்பு பண்டங்களை வாங்குவதைத் தவிர்க்கிறேன் – அவை வீட்டில் இருந்தால், என்னால் அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது.
ஒரு நாள், நான் கடினமாக உழைத்துவிட்டு, சோர்வடைந்த பிறகு, என் உடலில் சர்க்கரை அளவு குறைந்துவிட்டது. ஆனால் எங்கள் வீட்டில் தின்பண்டங்கள் எதுவும் இல்லாததால், 😭 நான் பரத்தை நோக்கி விரைவாக ஒரு ஜெபத்தை ஏறெடுத்து: “ஆண்டவரே, யாராவது ஒருவரை இனிப்பு பண்டங்களுடன் என் வீட்டு வாசலில் அனுப்பி வையுங்கள்” என்று ஜெபித்தேன். 🙏🏼
இது பொய் அல்ல, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது, சற்று நேரத்திற்குள், வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது, சூடாக செய்திருந்த வாழைப்பழ கேக்குடன் இரண்டு நண்பர்கள் என் முன் வந்து நின்றனர்! 🥧🤤
நான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், சிறியதும் பார்வைக்கு அற்பமானதுமான ஜெபங்களுக்குக் கூட ஆண்டவர் பதிலளிப்பார் என்பதை நான் நன்கு அறிவேன். நான் இப்படிப்பட்ட ஜெபங்களை அநேக முறை ஜெபித்திருக்கிறேன், எல்லா நேரங்களிலும், எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைத்தது என்று சொல்ல முடியாது – ஒருவேளை அதுவும் எனது நன்மைக்காகவே இருக்கலாம்!
“நீ ஒரு கேக்கைச் செய்து கேம்ரனுக்கும் ஜெனிக்கும் உடனே கொண்டுபோ!” என்று பரத்திலிருந்து வந்த ஆண்டவருடைய குரலை எங்கள் நண்பர்கள் கேட்கவில்லை. இருந்தபோதிலும், அவர்கள் கேக்குகளை செய்து, “இதை யாருடன் பகிர்ந்துகொள்ளலாம்?” என்று தங்களுக்குத் தாங்களே பேசிக்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர், எங்கள் பெயர்களை அவர்களின் இதயங்களில் மெதுவாகப் பதிய வைத்தார்.
எங்கள் நண்பர்கள் கேக்குடன் எங்கள் முன்பு வந்து நின்றது ஒரு அதிசயம்தான். சில சமயங்களில் நமக்கு அதிசயம் நடக்கும், இன்னும் சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாமே அதிசயமாக இருப்போம். “என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” என்றும் (1 யோவான் 3:18) “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” என்றும் வேதாகமம் சொல்கிறது. (கலாத்தியர் 6:10)
இன்றைக்கு நீங்கள் ஏதாவது ஒரு நபருக்கு அதிசயமாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கேக்குகளைச் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் அவர்களைப் பற்றி நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், இந்த மின்னஞ்சலை அவர்களுக்கு அனுப்பினால் போதும்!
![unnamed (7) unnamed (7)](https://tamil.jesus.net/wp-content/uploads/2022/03/unnamed-7.png)