ஆண்டவர் ஒருபோதும் உன் நிமித்தம் சோர்ந்துபோக மாட்டார்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் ஒருபோதும் உன் நிமித்தம் சோர்ந்துபோக மாட்டார்…

புதிதாகப் பிறந்த குழந்தையின் வாழ்க்கைக்கு முதல் சில மாதங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். குழந்தைகளின் பால்புட்டிகள், டயப்பர்கள் போன்றவற்றின் மீது தொடர் கவனம் செலுத்தி, தொடர்ந்து தங்கள் குழந்தையை கவனித்துக்கொண்டு இருப்பதால், பெற்றோரின் இரவுகள் குறுகியவையாகவும் அவர்களின் பகல் நேரங்கள் நீண்டவையாகவும் காணப்படுகின்றன.

இப்போது, இதோ ஒரு கேள்வி… தாய் எவ்வளவு அதிகமாக களைப்படைந்திருந்தாலும், அவள் தன் குழந்தையிடம், “உண்மையிலேயே சொல்கிறேன், இப்போதே, பிடிவாதத்தை நிறுத்து… கொஞ்சமாவது நீயாக வேலை செய்! என்னால் உனக்கு உதவ முடியாது, நீயாகவே செய்துகொள்!” என்று சொல்வாளா?

நிச்சயமாக சொல்லமாட்டாள்! அதற்குப் பதிலாக, அவள் விடாமுயற்சியுடன், தன் குழந்தைக்கு நம்பிக்கையூட்டி, கவனித்துக்கொள்கிறாள். எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தனது சிறிய குழந்தையின் அழுகையை ஆற்ற அவள் ஒவ்வொரு இரவிலும் பல முறை எழும்புகிறாள்.

இதைப்போலவே, உன் பிதாவாகிய தேவன் உன் விண்ணப்பங்களைக் கேட்டு அவற்றிற்குப் பதிலளிக்கிறார்.

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (வேதாகமத்தில் சங்கீதம் 34:15ஐப் பார்க்கவும்)

இந்தப் பூமியில் 700 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்… இருப்பினும், ஆண்டவர் உன் அழுகையின் சத்தத்தைக் கேட்கிறார் மற்றும் உனக்குத் தனிப்பட்ட விதத்தில் பதிலளிக்கிறார். அவருடைய அன்பு நீ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் ஆழமானது. உன் மீதான அவரது இரக்கம் ஈடு இணையற்றது, அது சூழ்நிலைகளைச் சார்ந்ததல்ல, மாற்றத்திற்கு உட்பட்டதும் அல்ல.

உன்னைக் கவனித்துக்கொள்வதிலும், உன்னிடம் பேசுவதிலும், உன்னுடன் நடப்பதிலும், உன்னை ஆறுதல்படுத்துவதிலும் ஆண்டவர் ஒருபோதும் சோர்வடைவதில்லை. அவருடைய அன்பான பார்வை உன் வாழ்நாள் முழுவதும் உன் மீது இருக்கிறது. நீ களிகூரும்போது அவர் உன்னுடன் சேர்ந்து களிகூருகிறார், நீ சோகமாக இருக்கும்போது அவரும் உன்னோடு சேர்ந்து சோகமாக இருக்கிறார். அவர் உன் மீது இரக்கம், நன்மை, மற்றும் மனதுருக்கம் ஆகியவற்றை தொடர்ந்து பொழிந்தருளுகிறார்.

உனக்கு “இது போதும்” என்று ஆண்டவர் ஒருபோதும் சொல்லமாட்டார். நீ அவரை சலிப்படையச் செய்வதில்லை, அவர் உன் நிமித்தம் சோர்வடைவதில்லை. நீ அவருடைய அன்பு மகன் / அன்பு மகள்!

சாட்சி: “முதலாவதாக, ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று சொல்ல விரும்புகிறேன். ஆண்டவரே எனக்கு சாட்சியாய் இருக்கிறார். மிகவும் இக்கட்டான நேரத்தில் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களது நேர்மறையான ஊக்கமளிக்கிற மின்னஞ்சல்களினால், நான் கடினமான நாட்கள் சிலவற்றை எளிதாகக் கடந்து வந்திருக்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலைத் திறந்து, கர்த்தர் எனக்காக என்ன சித்தம் வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க நான் தினமும் காலை வேளையில் காத்திருக்கிறேன். நான் உங்களையும் உங்கள் ஊழியத்தில் இணைந்து செயல்படும் ஒவ்வொருவரையும், மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக உங்களால் தொடப்படும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நான் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்துவந்தேன். ஜெபம் மற்றும் நேர்மறையான ஊக்கத்தின் மூலம், நான் அடிமைத்தனத்தின் அனைத்து கட்டுகளையும் முறியடித்தேன். நான் வாழ்கிறேன், ஆண்டவர் இருக்கிறார், அவருடைய இரக்கம் என்றுமுள்ளது மற்றும் உண்மையானது என்பதற்கு ஆதாரமாக சுவாசிக்கிறேன். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மீண்டும், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஆமென்.” (ராபர்ட்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!