ஆண்டவர் எப்பொழுதும் உனக்கு உதவ ஆயத்தமாய் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் எப்பொழுதும் உனக்கு உதவ ஆயத்தமாய் இருக்கிறார்!

“இரவானாலும் பகலானாலும், எந்த நேரத்திலும் உனக்கு உதவ ஆண்டவர் ஆயத்தமாய் இருக்கிறார்!”

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ வாசகர்களின் சாட்சிகளை வாசிப்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆண்டவருக்கு மகிமை செலுத்துவதை எப்போதும் நான் உறுதிசெய்துகொள்ளும்படிக்கு நான் அடிக்கடி என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் இவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். அவர் மகிமைக்குப் பாத்திரராய் இருக்கிறார்!

இன்று, கிங்ஸ்லியின் சாட்சியை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:

“எனது வாழ்வின் ஒரு கட்டத்தில் எனக்கு முன் எதிரி போன்று நின்றிருந்த எனது பலதரப்பட்ட உணர்வுகள், என் வேலை, என் குடும்ப சூழ்நிலை இவற்றினின்று நான் எனது தன்னம்பிக்கையை மீட்டெடுக்க உங்களது செய்திகள் தான் உண்மையிலேயே எனக்கு உதவின. என் காலை ஜெபத்திற்குப் பிறகு நான் நடக்கும் ஞானமுள்ள பாதையாக ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் திகழ்கிறது.”

ஆண்டவருடைய வார்த்தையை வாசிப்பது, ஜெபிப்பது என்பன போன்ற காலை வழக்கத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஆண்டவரிடத்தில் பேசுவதற்கும் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் நேரம் ஒதுக்குவது என்பது, அவருடனான உறுதியான மற்றும் ஆழமான உறவுக்கு அடித்தளமாக அமையும்! ஆனால்… அது காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செய்யும்படி ஒதுக்கப்பட்ட ஒரு செயல் அல்ல.

பின் கிங்ஸ்லி அவர்கள் இவ்வாறு எழுதினார், “கர்த்தர் என்னிடம் பேசுகிறார், எல்லோரும் என்னைக் கைவிட்டாலும், அவர் எனக்கு உண்மையுள்ளவராக இருப்பார் என்பதை எனக்குத் தெரியப்படுத்தினார். ஒரு நாளின் 24 மணி நேரமும் அவர் எனக்கு உதவ ஆயத்தமாக இருப்பதால் நான் எப்போதும் அவரை நம்பலாம்.”

இது மிகவும் உண்மை… ஆண்டவர் எந்த நேரத்திலும், எந்தத் தருணத்திலும் உனக்கு உதவ ஆயத்தமாக இருக்கிறார்! அவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. (சங்கீதம் 121:4) அவருடைய பார்வை உன் மீது தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது. உன் உட்காருதலையும் உன் எழுந்திருக்குதலையும் அவர் அறிந்திருக்கிறார். (சங்கீதம் 139:2-5) தேவன் உனக்கு ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையாய் இருக்கிறார். (சங்கீதம் 46:1)

பார்த்தாயா? ஜெபத்தின் மூலம் ஆண்டவரை எந்த நேரத்திலும் நாம் நெருங்க முடியும். அதாவது வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் அவரை நெருங்கலாம்! ஜெபம் என்பது ஆண்டவரை நாம் அணுகும் நேரடி வழி. நீ விரும்பினால், அவருக்கு நன்றி சொல்லும்படி என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, எந்த நேரத்திலும், ஒவ்வொரு நொடியும் எனக்கு உதவ ஆயத்தமாக இருப்பதற்கு நன்றி! என்னையும், நான் இப்போது அனுபவிக்கும் சகல காரியங்களையும் பார்த்துக்கொள்வதற்காக நன்றி. நீர் மிகவும் உண்மையுள்ளவர். என் இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்”.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!