ஆண்டவர் உன் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார்!

சில சமயங்களில், நாம் ஜெபிக்கும்போது தேவன் நம் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்றும் அவர் பதிலளிக்கப் போகிறார் என்றும் நாம் 100% முழுமையாக நம்பாமல் இருக்கலாம். ஆனாலும், அவருடைய சித்தத்தின்படி நாம் கேட்கும்போது, நாம் ஜெபத்தில் கேட்கிறவைகளைப் பெற்றுக்கொள்வோம்! தேவனுடைய வார்த்தை சொல்வது போல்,

“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.” (வேதாகமத்தில் 1 யோவான் 5:14-15ஐப் பார்க்கவும்)

அப்படி என்றால், அவருடைய சித்தத்தை நாம் எப்படி அறிந்துகொள்வது? வேதாகமத்தை வாசித்து, தவறாமல் ஜெபிப்பதன் மூலம் நாம் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும். தேவன் உன்னுடன் சரியானதும் மிகவும் நெருக்கமானதுமான உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஆதலால் சந்தேகமின்றி, நீ அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு, நிச்சயமாக அவர் அதை உனக்கு வெளிப்படுத்துவார்!

இது இவ்வளவு எளிதான விஷயமாக இருந்தால், ஏன் சில சமயங்களில் நம் ஜெபங்கள் பரலோகத்தை எட்டுவதாகத் தோன்றுவதில்லை? நிச்சயமாக தேவன் இன்னும் ராஜரீகமுள்ளவராய் இருக்கிறார், அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பதால், உன்னை வீணாக காக்கவைக்கிறார் என்று அர்த்தமல்ல. உன் சூழ்நிலையின் மீது அவருக்கு ஆர்வமில்லாமல் உன்னைப் புறக்கணித்துவிட முடிவு செய்துவிட்டார் என்றும் அர்த்தமல்ல. சில நேரங்களில் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதும், சரியான நேரம் அதுவல்ல என்பதுமே அர்த்தமாகும். ஆனால் இதை நீ உறுதியாக நம்பலாம்—உன் தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார், அவர் உன்னை மறந்துவிடவில்லை!

நீ என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறாயா? “ஆண்டவரே, என் வாழ்க்கைக்காக நீர் கொண்டிருக்கும் உமது சித்தத்தின்படியே நான் ஜெபித்தால், நீர் எனக்கு சாதகமாக பதிலளிப்பீர் என்று சொல்லும் உமது வார்த்தையை நான் நம்புகிறேன்! ஆகவே என்னிடம் பேசுவீராக, என் வாழ்க்கைக்கான உம்முடைய சித்தங்களை வெளிப்படுத்துவீராக, இதனால் நீர் எனக்காகத் தேர்ந்தெடுத்துள்ள பாதையை என்னால் பின்தொடர முடியும் மற்றும் எதைச் செய்வதற்காக நீர் என்னை அழைக்கிறீரோ அதை முழுமையாகச் செய்து முடிக்க முடியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!