ஆண்டவர் உன் சார்பில் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன் சார்பில் இருக்கிறார்!

“இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்”? (வேதாகமம், ரோமர் 8:31)

ஆண்டவர் உன் சார்பில் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? இதை நன்றாகப் புரிந்துகொள்ள நான் உனக்கு உதவ விரும்புகிறேன்… ஆண்டவருடைய வார்த்தையிலிருந்து இந்த வசனங்களை தியானித்து அவற்றை நீயே வாக்குத்தத்தமாக அறிக்கையிட்டு, அதைப் பற்றிக்கொள்ள நேரம் ஒதுக்கு. இது உன் வாழ்க்கையை மாற்றும்!

 1. கிறிஸ்து உனக்காக மரித்தார் (ரோமர் 5:8ஐப் பார்க்கவும்)
 2. நீ ஆண்டவருடைய பிள்ளை (யோவான் 1:12 ஐப் பார்க்கவும்)
 3. நீ ஒரு புது சிருஷ்டி (2 கொரிந்தியர் 5:17ஐப் பார்க்கவும்)
 4. நீ ஆண்டவருடன் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறாய் (2 கொரிந்தியர் 5:18ஐப் பார்க்கவும்)
 5. உன் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது (பிலிப்பியர் 4:3 ஐப் பார்க்கவும்)
 6. பிதாவினிடத்தில் உனக்காகப் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார்(1 யோவான் 2:1ஐப் பார்க்கவும்)
 7. நீ மன்னிக்கப்பட்டிருக்கிறாய் (கொலோசெயர் 1:14 ஐப் பார்க்கவும்)
 8. நீ விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய் (ரோமர் 5:1ஐப் பார்க்கவும்)
 9. நீ ஆண்டவரின் நண்பனாய்/தோழியாய் இருக்கிறாய் (யோவான் 15:15 ஐப் பார்க்கவும்)
 10. நீ கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பினராய் இருக்கிறாய் (1 கொரிந்தியர் 12:27ஐப் பார்க்கவும்)
 11. நீ உன் பிதாவை நேரடியாக அணுகலாம் (எபேசியர் 2:18 பார்க்கவும்)
 12. சகலமும் உனது நன்மைக்காகவே நடைபெறுவதை நீ உறுதியாக நம்பலாம் (ரோமர் 8:28 ஐப் பார்க்கவும்)
 13. ஆண்டவர் உன்னில் தொடங்கிய நற்கிரியையை செய்து முடிப்பார் என்று நீ உறுதியாக நம்பலாம் (பிலிப்பியர் 1:6ஐப் பார்க்கவும்)
 14. உன் தேவையில் நீ உதவி பெறுவது நிச்சயம் (எபிரேயர் 4:16ஐப் பார்க்கவும்)
 15. நீ ஆண்டவரின் பாதுகாப்பில் இருக்கிறாய் (1 யோவான் 5:18ஐப் பார்க்கவும்)
 16. நீ பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் இருக்கிறாய் (மத்தேயு 5:13-14ஐப் பார்க்கவும்)
 17. நீ கனி கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறாய் (யோவான் 15:16 ஐப் பார்க்கவும்)
 18. நீ தேவனுடைய ஆலயமாய் இருக்கிறாய் (1 கொரிந்தியர் 3:16ஐப் பார்க்கவும்)
 19. நீ ஆண்டவருடைய ஊழியத்தில் ஒரு உடன் பங்காளியாய் இருக்கிறாய் (2 கொரிந்தியர் 6:1ஐப் பார்க்கவும்)
 20. நீ கிறிஸ்துவுடன் உன்னதங்களில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறாய் (எபேசியர் 2:6 ஐப் பார்க்கவும்)
 21. உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலமாக நீ எல்லாவற்றையும் செய்ய முடியும் (பிலிப்பியர் 4:13ஐப் பார்க்கவும்)
 22. தேவனுடைய வார்த்தை உன்னில் நிலைத்திருப்பதால் நீ பலமானவன்/பலமானவள். (1யோவான் 2:14ஐப் பார்க்கவும்)
 23. உன்னில் இருக்கிற ஆண்டவர் இந்த உலகத்திலிருக்கிற தீயவனைவிடப் பெரியவர். (1யோவான் 4:4ஐப் பார்க்கவும்)

ஆம், ஆண்டவர் உனக்காக இருக்கிறார், அவர் உன்னோடு இருக்கிறார், அவர் உனக்காகப் போராடுகிறார். உனக்கு எதிராக யாரால் நிற்க முடியும்?

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!